கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்குபெற்றன. இதில், இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.


இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஒரு லீக் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ.33.17 லட்சம் கிடைக்கும். 


- அரையிறுதிக்கு தகுதிபெறதா 6 அணிகளுக்கு (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து) மொத்தமாக ரூ.82.94 லட்சம் வழங்கப்படும். இதில் 6 பங்கு என்பதை நினைவில் கொள்ளவும்.


அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணிகளுக்கு (நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா) தலா ரூ.6.63 கோடி கிடைக்கும். இன்றைய இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடித்த இந்திய  அணிக்கு ரூ.16.59 கோடி வழங்கப்பட்டுள்ளது.  இன்றைய இறுதிப்போட்டியில் வென்று உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணிக்கு ரூ.33.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.