World Cup 2023: இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கனமழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த போட்டி கனமழை காரணமாக டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முன்றாவது ஒருநாள் போட்டியினை ராஜ்கோட்டில் விளையாடியது. அதன் பின்னர், அங்கிருந்து தனது முதல் பயிற்சி ஆட்டத்திற்கு கவுகாத்திக்கும் அதன் பின்னர் தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்திற்காக திருவனந்த புரத்திற்கு வந்தது. ஆனால் இரண்டு போட்டிகளும் மழையால் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி மழையை மட்டும் பார்ப்பதற்காகவே மொத்தம் 6 ஆயிரத்து 80 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளது என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதாவது ராஜ்கோட்டில் இருந்து கவுகாத்திக்கு இடையிலான தொலைவு என்பது 2 ஆயிரத்து 713 கிலோ மீட்டர், அதேபோல், கவுகாத்தியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இடையிலான தொலைவு என்பது 3 ஆயிரத்து 367 கிலோ மீட்டர் ஆகும். இவ்வளவு தொலைவு இந்திய அணி பயணம் செய்து மழையை மட்டும் சந்தித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பையில் போட்டிகள் எந்த தேதியில் யார் யாருக்கு?
- அக்டோபர் 5: இங்கிலாந்து vs நியூசிலாந்து - அகமதாபாத்
- அக்டோபர் 6: பாகிஸ்தான் vs நெதர்லாந்து - ஹைதராபாத்
- அக்டோபர் 7: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் - தர்மசாலா
- அக்டோபர் 7: தென்னாப்பிரிக்கா vs இலங்கை - டெல்லி
- அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா- சென்னை
- அக்டோபர் 9: நியூசிலாந்து vs நெதர்லாந்து - ஹைதராபாத்
- அக்டோபர் 10: இங்கிலாந்து vs பங்களாதேஷ்-தர்மசாலா
- அக்டோபர் 10: பாகிஸ்தான் vs இலங்கை- ஹைதராபாத்
- அக்டோபர் 11: இந்தியா vs ஆப்கானிஸ்தான்- டெல்லி
- அக்டோபர் 12: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா- லக்னோ
- அக்டோபர் 13: நியூசிலாந்து vs வங்கதேசம்- சென்னை
- அக்டோபர் 14: இந்தியா vs பாகிஸ்தான்- அகமதாபாத்
- அக்டோபர் 15: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்- டெல்லி
- அக்டோபர் 16: ஆஸ்திரேலியா vs இலங்கை - லக்னோ
- அக்டோபர் 17: தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து - தர்மசாலா
- அக்டோபர் 18: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்- சென்னை
- அக்டோபர் 19: இந்தியா vs வங்கதேசம்- புனே
- அக்டோபர் 20: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - பெங்களூரு
- அக்டோபர் 21: நெதர்லாந்து vs இலங்கை - லக்னோ
- அக்டோபர் 21: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா- மும்பை
- அக்டோபர் 22: இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா
- அக்டோபர் 23: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்- சென்னை
- அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்- மும்பை
- அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து-டெல்லி
- அக்டோபர் 26: இங்கிலாந்து vs இலங்கை - பெங்களூரு
- அக்டோபர் 27: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா- சென்னை
- அக்டோபர் 28: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - தர்மஷாலா
- அக்டோபர் 28: நெதர்லாந்து vs பங்களாதேஷ் - கொல்கத்தா
- அக்டோபர் 29: இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ
- அக்டோபர் 30: ஆப்கானிஸ்தான் vs இலங்கை - புனே
- அக்டோபர் 31: பாகிஸ்தான் vs பங்களாதேஷ்- கொல்கத்தா
- நவம்பர் 1: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா- புனே
- நவம்பர் 2: இந்தியா vs இலங்கை - மும்பை
- நவம்பர் 3: நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான் - லக்னோ
- நவம்பர் 4: நியூசிலாந்து vs பாகிஸ்தான் - பெங்களூரு
- நவம்பர் 4: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா- அகமதாபாத்
- நவம்பர் 5: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா
- நவம்பர் 6: பங்களாதேஷ் vs இலங்கை- டெல்லி
- நவம்பர் 7: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - மும்பை
- நவம்பர் 8: இங்கிலாந்து vs நெதர்லாந்து - புனே
- நவம்பர் 9: நியூசிலாந்து vs இலங்கை - பெங்களூரு
- நவம்பர் 10: தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்- அகமதாபாத்
- நவம்பர் 11: ஆஸ்திரேலியா vs வங்கதேசம்- புனே
- நவம்பர் 11: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - கொல்கத்தா
- நவம்பர் 12: இந்தியா vs நெதர்லாந்து - பெங்களூரு
- 15 நவம்பர்: அரையிறுதி 1- மும்பை
- 16 நவம்பர்: அரையிறுதி 2- கொல்கத்தா
- 19 நவம்பர்: இறுதி- அகமதாபாத்.