மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகள் நாளை தொடங்க உள்ள சூழலில் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்திய கேப்டன்கள் யார் என்ற பட்டியலை இங்கே பார்ப்போம்:

மகளிர் உலகக் கோப்பை டி20:

கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இச்சூழலில் தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி நாளை (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது.  

இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இச்சூழலில் தான் இந்திய ஆடவர் அணியைப் போல் இந்திய மகளிர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்திய கேப்டன்கள் யார் என்ற பட்டியலை இங்கே பார்ப்போம்:

இந்திய மகளிர் T20I கேப்டன் பட்டியல்:

கேப்டன் ஆண்டு  போட்டிகள்  வெற்றி பெற்றது வெற்றி சதவீதம்
மிதாலி ராஜ் 2006-2016  32 17 53.12%
ஜூலன் கோஸ்வாமி 2008-2015 18 8 44.44%
அஞ்சும் சோப்ரா 2012-2012 10 3 30.00%
ஸ்மிருதி மந்தனா 2019-2024 14 8 57.14%
ஹர்மன்ப்ரீத் கவுர் 2012-தற்போது 118 68 57.62%

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்?

ஹர்மன்பிரீத் கவுர் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் யார்?

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக மிதாலி ராஜ் பரவலாகக் கருதப்படுகிறார்.

மிதாலி ராஜ் எவ்வளவு சம்பாதிக்கிறார்?

மிதாலி ராஜின் நிகர சொத்து மதிப்பு சுமார் $5 மில்லியன், அதாவது சுமார் ₹41.93 கோடி.

மிகவும் வெற்றிகரமான பெண்கள் கிரிக்கெட் அணி எது?

மிகவும் வெற்றிகரமான பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணி.

இந்தியாவின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் யார்?

மிதாலி ராஜ் இந்தியாவின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாகக் கருதப்படுகிறார், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பல்வேறு சதனைகளை செய்திருக்கிறார்.