நாளை தொடங்க உள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அட்டவணை, எங்கே நடைபெறுகிறது, எத்தனை போட்டிகள், எப்படி பார்ப்பது என்பது தொடர்பான தகவலை பார்ப்போம்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை:

கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இச்சூழலில் தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி நாளை (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. 

இதற்கு முன்னதாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இச்சூழலில் தான் இந்திய ஆடவர் அணியைப் போல் இந்திய மகளிர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் நாளை தொடங்க உள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அட்டவணையை பார்ப்போம்:

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 அட்டவணை:

தேதி போட்டி குழு/நிலை நேரம் இடம்
அக்டோபர் 3, வியாழன் பங்களாதேஷ் vs ஸ்காட்லாந்து பி 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 3, வியாழன் பாகிஸ்தான் vs இலங்கை 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 4, வெள்ளி தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் பி 3:30 PM துபாய்
அக்டோபர் 4, வெள்ளி இந்தியா vs நியூசிலாந்து 7:30 PM துபாய்
அக்டோபர் 5, சனிக்கிழமை பங்களாதேஷ் vs இங்கிலாந்து பி 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 5, சனிக்கிழமை ஆஸ்திரேலியா vs இலங்கை 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 6, ஞாயிறு இந்தியா vs பாகிஸ்தான் 3:30 PM துபாய்
அக்டோபர் 6, ஞாயிறு வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து 7:30 PM துபாய்
அக்டோபர் 7, திங்கள் இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா பி 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 8, செவ்வாய் ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 9, புதன் தென்னாப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து பி 3:30 PM துபாய்
அக்டோபர் 9, புதன் இந்தியா vs இலங்கை 7:30 PM துபாய்
அக்டோபர் 10, வியாழன் பங்களாதேஷ் vs வெஸ்ட் இண்டீஸ் பி 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 11, வெள்ளி ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 7:30 PM துபாய்
அக்டோபர் 12, சனிக்கிழமை நியூசிலாந்து vs இலங்கை 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 12, சனிக்கிழமை பங்களாதேஷ் vs தென்னாப்பிரிக்கா பி 7:30 PM துபாய்
அக்டோபர் 13, ஞாயிறு இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து பி 3:30 PM ஷார்ஜா
அக்டோபர் 13, ஞாயிறு இந்தியா vs ஆஸ்திரேலியா 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 14, திங்கள் பாகிஸ்தான் vs நியூசிலாந்து 7:30 PM துபாய்
அக்டோபர் 15, செவ்வாய் இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் பி 7:30 PM துபாய்
அக்டோபர் 17, வியாழன் TBD (To be announced ) அரையிறுதி 1 7:30 PM துபாய்
அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை TBD அரையிறுதி 2 7:30 PM ஷார்ஜா
அக்டோபர் 20, ஞாயிறு TBD இறுதி 7:30 PM

துபாய்

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங்: 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிகர்கள் பார்க்கலாம். அதேபோல் Disney+ Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் ரசிகர்கள் பார்க்க முடியும் .