ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை:

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று (அக்டோபர் 3) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இதில் முதல் முறையாக ஸ்மார்ட் ரீப்ளே இடம்பெறும் என்று ஐசிசி கூறியுள்ளது. 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை ஸ்மார்ட் ரீப்ளே முறையைப் பயன்படுத்தும் முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இந்தமுறை 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் இங்கிலாந்தின் தி ஹன்ட்ரட் ஆகியவற்றில் செயல்பாட்டில் காணப்பட்டது, ஆனால் இது சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"ஒவ்வொரு விளையாட்டிலும் கவரேஜ் குறைந்தபட்சம் 28 கேமராக்களைக் கொண்டிருக்கும், மேலும் பல்வேறு பகுப்பாய்வும் காட்சி மேம்பாடுகள் மூலம் நிரப்பப்படும். ஹாக்-ஐ ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்துடன், அனைத்து போட்டிகளிலும் முடிவெடுக்கும் திறனாய்வு அமைப்பு (டிஆர்எஸ்) கிடைக்கும்.

துல்லியமான முடிவெடுப்பதற்காக, ஒன்றினைக்கப்பட்ட மல்டி-ஆங்கிள் காட்சிகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய டிவி நடுவருக்கு உதவி செய்வதாக அமையும்" என்று ஐசிசி ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் என்றால் என்ன?

இந்த முறையின்படி டிவி அம்பயர், Hawk-Eye நிறுவனங்களுக்கு இடையே தொலைக்காட்சியை சேர்ந்த எவரும் இடம் பெற வாய்ப்பில்லை. டிவி அம்பயர் அமர்ந்திருக்கும் அதே ரூமில் தான் Hawk-Eye நிறுவன வல்லுநர்களும் இருப்பார்கள். இதில், களநடுவர் என்ன கேட்கிறாரோ அதனை டிவி அம்பயர் மற்றும் Hawk-Eye வல்லுநர்கள் நேரடியாகவே ஒளிபரப்பு செய்வார்கள்.

இதற்கு 4 கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இனிமேல் 8 கேமராக்கள் பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த 8 கேமராக்களும் மைதானத்தில் பல பகுதிகளில் பொருத்தப்பட்டு போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.

அந்த 8 கேராக்கள் என்ன படம் பிடித்ததோ அதனை ஒரே நேரத்தில் திரையில் காட்டும். இதன் மூலமாக டிவி அம்பயர் நேரம் தாழ்த்தாமல் உடனடியாக தனது முடிவை அறிவிக்க முடியும். மேலும், எல்பிடபிள்யூக்கு அவுட் சைடு லெக் திசையில் பந்து பிட்ச்சாகி இருந்தால் அதனை Hawk-Eye வல்லுநர்கள் கூறி விடுவார்கள். இதை வைத்து டிவி அம்பயர் திரையில் காட்டி எல்பிடபிள்யூ இல்லை என்று அறிவிக்க முடியும். இதன் மூலமாக நேரம் மிச்சப்படும்.