மகளிர் டி20 உலகக் கோப்பை:


மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. புதிய அட்டவணையின் கீழ் வரும் அக்டோபர் 3ஆம் தேதி மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடங்குகிறது. முதல் நாளில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் ஷார்ஜாவில் மோதுகின்றன.


இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 6ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகின்றன. இந்நிலையில், 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன் பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாகவும் இந்திய அணியை வழிநடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் உடல் தகுதியை பொறுத்து அணியில் தொடர்வார்களா என்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷீகா பாண்டே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் ஷிகா பாண்டே தற்போது மகளிருக்கான கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.






டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி:


ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (விக்கெட் கீப்பர்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்


ரிசர்வ் வீராங்கனைகள்: உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர்