மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் வருகிற 10 ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை வருகின்ற பிப்ரவரி 12 ம் தேதி எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெறுவதே ஹர்மன்பிரீத்தின் முதல் இலக்கு. 

கங்குலி மற்றும் தோனி வழியில்.. 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “ தோனி போட்டியின்போது களத்தில் எவ்வளவு புத்திசாலியாக செயல்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் தலைமை தாங்கிய போட்டிகளின் வீடியோக்களை பார்த்து நிறைய கற்றுகொண்டு வருகிறேன். சவுரவ் மற்றும் தோனியின் தலைமையிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். எப்போதும் சிறிய விஷயங்களில் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள். மைதானத்தில் எனக்கும் அணிக்கும் அவர்கள் பெரிதும் உதவுகிறார்கள். கேப்டன் பதவி என்று வரும்போது, ​​எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு முன்னாள் கேப்டன்களின் ஐடியாக்கள் தான் வெளியே வரும்” என்றார். 

தொடர்ந்து கங்குலி மற்றும் தோனியின் தலைமையில் உங்களுக்கு என்ன கவர்ந்தது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ அவர்கள் இருவரும் பின்பற்றிய கேப்டன்சி விதத்தை நானும் பின்பற்ற நினைக்கிறேன். கங்குலி தலைமையில் இந்திய ஆண்கள் அணி பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. டிரஸ்ஸிங் ரூமின் சூழலை மாற்றி சக வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தார். அதேபோல், நானும் இருக்க ஆசைப்படுகிறேன்” என்றார். 

மேலும், ”இந்த முறை அணிக்களுக்குள் கடும் போட்டி இருக்கும் என்று எனக்கு தெரியும். நிச்சயமாக வழக்கம்போல் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தும். ஆனால், இந்தமுறை அணிகளுக்கிடையேயான வேறுபாடு பெரிதாக இருக்காது. பெரும்பாலான போட்டிகள் சிறு வித்தியாசத்திலே முடியும். இந்திய அணி கோப்பைகளுக்கான பசியுடன் இருக்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் தென்னாப்பிரிக்கா வந்தோம். அணியில் நம்பிக்கை குறைவு இல்லை. எந்த நாளில் எந்த அணியையும் வீழ்த்த முடியும்” என்று தெரிவித்தார். 

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கான இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே

போட்டி அட்டவணை:

தேதி

 அணிகள்

நேரம் & இடம்

10 பிப்ரவரி

தென்னாப்பிரிக்கா vs இலங்கை

இரவு 10.30 (கேப் டவுன்)

11 பிப்ரவரி

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து

மாலை 6.30 (பார்ல்)

11 பிப்ரவரி

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

இரவு 10.30 (பார்ல்)

12 பிப்ரவரி

இந்தியா vs பாகிஸ்தான்

மாலை 6.30 (கேப் டவுன்)

12 பிப்ரவரி

பங்களாதேஷ் vs இலங்கை

இரவு 10.30 (கேப் டவுன்)

13 பிப்ரவரி

அயர்லாந்து vs இங்கிலாந்து

மாலை 6.30 (பார்ல்)

13 பிப்ரவரி

தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து

இரவு 10.30 (பார்ல்)

14 பிப்ரவரி

ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ்

இரவு 10.30 (க்கெபர்ஹா)

15 பிப்ரவரி

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா

மாலை 6.30 (கேப் டவுன்)

15 பிப்ரவரி

பாகிஸ்தான் vs அயர்லாந்து

இரவு 10.30 (கேப் டவுன்)

16 பிப்ரவரி

இலங்கை vs ஆஸ்திரேலியா

மாலை 6.30 மணி (Gqeberha)

17 பிப்ரவரி

நியூசிலாந்து vs பங்களாதேஷ்

மாலை 6.30 (கேப் டவுன்)

17 பிப்ரவரி

வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து

இரவு 10.30 (கேப் டவுன்)

18 பிப்ரவரி

இங்கிலாந்து vs இந்தியா

மாலை 6.30 மணி (Gqeberha)

18 பிப்ரவரி

தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா

இரவு 10.30 (க்கெபர்ஹா)

19 பிப்ரவரி

பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ்

மாலை 6.30 (பார்ல்)

19 பிப்ரவரி

நியூசிலாந்து vs இலங்கை

இரவு 10.30 (பார்ல்)

20 பிப்ரவரி

அயர்லாந்து vs இந்தியா

மாலை 6.30 மணி (Gqeberha)

21 பிப்ரவரி

இங்கிலாந்து vs பாகிஸ்தான்

மாலை 6.30 (கேப் டவுன்)

21 பிப்ரவரி

தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்

இரவு 10.30 (கேப் டவுன்)

23 பிப்ரவரி

அரையிறுதி 1

மாலை 6.30 (கேப் டவுன்)

24 பிப்ரவரி

அரையிறுதி 2

மாலை 6.30 (கேப் டவுன்)

26 பிப்ரவரி

இறுதி

மாலை 6.30 (கேப் டவுன்)