ஆண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கை (WIPL) தொடங்க பல வருடமாக வைத்திருந்த யோசனையை செயல்படுத்தியுள்ளது.
டி20 சாம்பியன்ஷிப்பின் தொடக்க பதிப்பில், மும்பை, பெங்களூர், டெல்லி, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய மொத்தம் ஐந்து அணிகள் விளையாடுகின்றன. மும்பையில் மார்ச் 04 முதல் மார்ச் 26 வரை நடைபெறும் இந்த தொடருக்கு முன் ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் ஏலத்தில் கலந்துகொண்டு வீரர்களை ஏலம் எடுக்க உள்ளனர். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் என திட்டமிடப்பட்ட ஏலத்தில் மொத்தம் 246 இந்திய வீராங்கனைகள் மற்றும் 163 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பெறுகின்றனர்.
இந்த ஏலத்தில் ஒரு சில முக்கியமான வீரர்களை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவும். அப்படி பட்ட வீரர்கள் மற்றும் அவர்கள் ஏன் அணிக்கு அவசியம் என்பதையும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ்
22 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் குறுகிய காலத்திற்குள், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2018 இல் வுமன் இன் ப்ளூ அணிக்காக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார், கிளாசிக் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இந்தியாவில் அதிகம் பேசப்படும் வீரர்களில் ஒருவராக வெகு விரைவிலேயே மாறினார்.
மும்பையைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 75 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 29.7 சராசரி மற்றும் 112.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 1575 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஏலத்தில் அவர் முக்கிய வீராங்கனையாக இருப்பார் என்பதற்கு 22 வயதான அவரது முன்மாதிரியான சர்வதேச புள்ளிவிவரங்கள் ஒரு சான்றாகும். ஜெமிமா ரோட்ரிக்ஸின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் ஆகும்.
- மெக் லானிங்
ஏலத்தின்போது முக்கிய இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வெளிநாட்டு வீராங்கனை மெக் லானிங் ஆவார். மூத்த வீரரான லானிங், 2010 முதல் அனைத்து வடிவங்களிலும் விளையாடி, ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக திகழ்கிறார். பல ஆண்டுகளாக, அவர் தன்னை ஒரு நம்பகமான கேப்டனாகவும், ரன் சேர்க்கும் வீரராகவும் நிரூபித்துள்ளதனால் அவரது அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
அவரை எடுப்பதன் மூலம் கேப்டன் ஸ்பாட் முழுமை அடையும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். 30 வயதான இவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் பெண்கள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் ஆவார். மெக் ஆஸ்திரேலியாவுக்காக 126 டி20 களில் 36.2 சராசரி மற்றும் 116.5 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் 3256 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு இந்திய ஆடுகளங்களில் விளையாடுவதற்கான திறமையையும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
- ஷஃபாலி வர்மா
19 வயதே ஆகும் ஷஃபாலி வர்மா கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் ஆபத்தான அதிரடி வீராங்கனை என்பதால், பல உரிமையாளர்கள் தங்கள் கண்களை ஷாஃபாலி வர்மா மீது வைத்துள்ளனர். இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய இளையவர், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பையில் கேப்டன்சி செய்து, தனது முன்மாதிரியான செயல்பாட்டின் காரணமாக கோப்பையையும் வென்ற நிலையில், சமீபத்தில் நிறைய பிரபலமடைந்து வருகிறார்.
உலகக்கோப்பையில் கேப்டனாக மட்டுமல்லாமல், தனது பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். அவர் அந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரராக உருவெடுத்தார். மேலும் ஸ்வேதா செஹ்ராவத் மற்றும் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோருக்குப் பின் மூன்றாவது இடத்தில் 7 போட்டிகளில் 24.57 சராசரியில் 172 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி 51 டி20 போட்டிகளில், சராசரியாக 24.6 மற்றும் 134.5 என்ற அதிர்ச்சியூட்டும் ஸ்ட்ரைக் ரேட்டில் 1231 ரன்கள் குவித்துள்ளார்.
19 வயது இளைஞரை தங்கள் அணியில் சேர்ப்பதன் மூலம், நம்பகமான டாப்-ஆர்டர் பேட்டரைப் பெறுவது மட்டுமல்லாமல், தங்கள் அணிக்கு ஒரு நல்ல கேப்டனும் கிடைப்பார் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
- சுசி பேட்ஸ்
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுசி பேட்ஸ், மகளிர் ஐபிஎல் ஏலத்தின் போது கடும் போட்டிக்கு மத்தியில் பங்கு பெறுகிறார். 35 வயதான அவர் டி20 ஐ வடிவத்தில் பெரும் நிபுணத்துவம் பெற்றவர். ஏனெனில் மகளிர் சர்வதேச டி20யின் ரன்-ஸ்கோரிங் தரவரிசையில் பல வருடமாக அவர் ஆட்சிதான். 139 டி20 சர்வதேசப் போட்டிகளில் 29.2 சராசரி மற்றும் 109.3 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3683 ரன்கள் குவித்து அட்டவணையில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் பேட்ஸின் சிறப்பான BBL பதிவுகள் தான் அவரை மிகவும் திறமையானவராக மாற்றியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு டி20 போட்டியில் 84 போட்டிகளில் 28 சராசரியாக மொத்தம் 2056 ரன்கள் எடுத்துள்ளார். பல ஆண்டுகளாக, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் வெற்றியில் 35 வயதான சுசி பேட்ஸ் பெரும் பங்கு வகித்துள்ளார். இந்த தொடக்கப் பதிப்பில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகளில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
- ஸ்மிருதி மந்தனா
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா உள்ளார். கடந்த தசாப்தத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மிகச்சிறந்த விஷயம் என்றால் அது மந்தனாவின் வருகைதான். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்குப் பிறகு, டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீராங்கனை மந்தனா ஆவார்.
ஏறக்குறைய பத்தாண்டு சர்வதேச வாழ்க்கையில், 26 வயதான அவர் இந்தியாவுக்காக 112 டி20 போட்டிகளில் 27.3 சராசரியில், 2651 ரன்கள் மற்றும், 77 ஒருநாள் போட்டிகளில் 43.3 சராசரியில் 3073 ரன்களையும் குவித்துள்ளார். அவரது நிபுணத்துவம் மற்றும் பேட்டிங் திறமையை தவிர, இளம் சூப்பர் ஸ்டார், இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பதால், அணிக்கு அதிக கவனத்தையும் ரசிகர்களையும் கொண்டு வருவார் என்பதால் அதிக விலைக்கு செல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது.