இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் போட்டி, பர்மிங்காவில் உள்ள எட்ஸ்பாஸ்டனில் நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் அடித்தி டிக்ளெர் செய்தது. இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்களும், பேரிஸ்டோவ் 78 ரன்களும் எடுத்திருந்தனர். 


இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 116.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 386 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 141 ரன்களும், அலெக்ஸ் கேரி 66 ரன்களும் எடுத்திருந்தனர். 


இங்கு உஸ்மான் கவாஜாவை அவுட்டாக செய்ய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்ட திட்டம் அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இங்கிலாந்து எதிராக உஸ்மான் கவாஜா 199 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். இதையடுத்து கவாஜாவை வெளியேற்ற பென் ஸ்டோக்ஸ், வழக்கத்திற்கு மாறாக பீல்டிங்கை செட் செய்தார்.  கவாஜாவுக்கு நேர் எதிரே ஆறு பீல்டர்களை நிறுத்தி வைக்க, அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் யார்க்கர் லெந்த் பந்தை இறக்கினார். கோட்டை விட்டு வெளியே ஓடிவந்து அடிக்க முயன்ற கவாஜா பந்தை தவறவிட, அது ஸ்டம்பை பதம் பார்த்தது. 






இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் உஸ்மான் கவாஜாவின் முதல் டெஸ்ட் சதம் முடிவுக்கு வந்தது. இது கவாஜாவின் 15வது டெஸ்ட் சதமும், இங்கிலாந்துக்கு எதிராக அவரது நான்காவது சதமாகவும் பதிவானது. 


ப்ரம்ப்ரெல்லா மூலம் வீழ்ந்த கவாஜா விக்கெட்: 


ஆஃப்சைடில் மூன்று பீல்டர்கள் மற்றும் லெக் சைடில் மூன்று பேர் கொண்ட ஒரு குடையைப் போன்ற ஃபீல்ட் பிளேஸ்மென்ட்தான் 'ப்ரம்ப்ரெல்லா’. ப்ரம்ப்ரெல்லா என்பது 1981 முதல் 2001 வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய ஆடுகளமாகும். இதன் பெயர் "ப்ரூம்" என்பதிலிருந்து பெறப்பட்ட ஒரு போர்ட்மேன்டோ வார்த்தையாகும். இந்த மைதானத்தில் கவாஜாவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் குடை போன்ற பீல்டிங்கை பயன்படுத்தினார். இதன் காரணமாக ப்ரம் மற்றும் அம்பர்லா இரண்டையும் சேர்த்து ப்ரம்ப்ரெல்லா என பெயர் பெற்றது.