கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த வர்ணனையாளர்களில் ஒருவர் ஹர்ஷா போக்லே. இவர் தன்னுடைய சிறப்பான கிரிக்கெட் அலசல்களின் மூலம் நீண்ட ஆண்டுகளாக பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவர் பல்வேறு கிரிக்கெட் தளங்களில் நிகழ்ச்சிகளையும், வர்ணனையும் செய்து வருகிறார். 


 


இந்நிலையில் இன்று அவர் விளையாட்டு தளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்து வந்துள்ளார். அப்போது அவருடை திடீரென துண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த சமயத்தில் அங்கு சிலர் அவரிடம் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.இதைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் பலரும் ஹர்ஷா போக்லேவிற்கு என்ன நடந்தது என்று ட்வீட்களை செய்து வந்தனர். 


 






இந்தச் சூழலில் ஹர்ஷா போக்லேவிற்கு எதுவும் ஆகவில்லை அவர் நலமுடன் இருப்பதாக ஒரு சில தகவலை பதிவிட்டுள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான முழு விவரமும் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பாக முழு விவரம் விரைவில் தெரியவரும் என்று கருதப்படுகிறது.


 






ஏற்கெனவே மும்பையில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள சூழலில் சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்ததாக இன்று தகவல் வெளியானது. மேலும் அவர்கள் வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும் தகவல் வெளியானது. இதனால் ஹர்ஷா போக்லேவும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதி வந்தனர். இந்தச் சூழலில் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை அவர் நலமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:என்றும் மரியாதையுடன்...- தோனி குறித்து மனம் உறுகிய கோலி: நெகிழ்ந்த ரசிகர்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண