WI vs IND 2nd ODI: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
நேற்று முன் தினம் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. 25 ஓவர்கள்கூட தாக்குப்பிடிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, ஒருநாள் தொடரை வெல்ல அடுத்துள்ள இரண்டு போட்டியிலும் வென்றாகவேண்டும். அதாவது இன்று நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வென்றால்தான் ஒருநாள் தொடரை வெல்ல முடியும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று களமிறங்குகிறது.
அதேபோல், இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்வதில் சிரமப்பட்டதாக தெரியவில்லை. இந்திய அணியில் ’ஏ’ அணி கூட வெஸ்ட் இண்டீஸ் அணியின் மெயின் அணியை தட்டி ஓரம் கட்டிவிடும் அளவிற்கு உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிலை. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல், இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்குவாரா என்பது போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவில் தான் இருக்கிறது.
இரு அணிகளின் உத்தேச ப்ளேயிங் லெவன்:
வெஸ்ட் இண்டீஸ் லெவன்:
ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி
இந்தியா லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்