இதில் இந்திய அணி பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டவுனில் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரையில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி குரூப் 2 இல் இடம்பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளும், இறுதிப் போட்டி பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலக்கோப்பையில் போட்டியிட அனைத்து அணிகளும் தென் ஆப்ரிக்காவுக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் முதல்முறையாக, 2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. கேப் டவுன், க்கெபர்ஹா மற்றும் பார்லில் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
குழுக்கள்:
குரூப் ஏ - ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா
குரூப் பி - இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்
இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவூர் (கேப்டன்) ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே
இந்திய அணியின் போட்டிகள்
இந்தியா vs பாகிஸ்தான், 12 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், பிப்ரவரி 15 - மாலை 6:30 PM IST
இந்தியா vs இங்கிலாந்து, பிப்ரவரி 18 - மாலை 6:30 PM IST
இந்தியா vs அயர்லாந்து, பிப்ரவரி 20 - மாலை 6:30 PM IST
அரையிறுதி 1 - A1 vs B2, 23 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
அரையிறுதி 2 - A2 vs B1, 24 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
இறுதி - SF 1 vs SF 2 வெற்றியாளர், 26 பிப்ரவரி - மாலை 6:30 PM IST
டெலிகாஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
2023 டி20 மகளிர் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் உள்ள டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது, அதேபோல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
லீக் போட்டிகாளுக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் அதாவது வார்ம்-அப் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள்:
பிப்ரவரி 6, 2023 (திங்கட்கிழமை)
- நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் (பிற்பகல் 1:30)
- இலங்கை vs அயர்லாந்து (பிற்பகல் 1:30)
- தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து (மாலை 6:00 மணி)
- ஆஸ்திரேலியா vs இந்தியா (மாலை 6:00 மணி)
- பாகிஸ்தான் vs பங்களாதேஷ் (மாலை 6:00 மணி)
பிப்ரவரி 8, 2023 (புதன்கிழமை)
- அயர்லாந்து vs ஆஸ்திரேலியா (பிற்பகல் 1:30)
- இங்கிலாந்து vs நியூசிலாந்து (பிற்பகல் 1:30)
- பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா (மாலை 6:00 மணி)
- வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா (மாலை 6:00 மணி)
- பங்களாதேஷ் vs இந்தியா (மாலை 6:00 மணி)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பக்கூடிய தளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னும் உறுதிப்படுத்தவில்லை.