2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் தனது ஓய்வை அறிவித்தார். நீண்ட நெடிய 24 வருட கிரிக்கெட் பயணத்தில் 600கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி, வெற்றி தோல்வி என அனைத்தையும் பார்த்துள்ள சச்சின் தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். 


அந்த வீடியோவில், மும்பையில் ஓடிய 315 பேருந்தில் ஏறி பயிற்சிக்கு சென்ற அனுபவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவாஜி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இந்த பேருந்தில்தான் சென்று வந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், பேருந்தின் கடைசி சீட்டில்தான் எப்போதும் அவர் அமருவார் என்றும் அதுதான் ஃபேவரைட் என்றும் தெரிவித்திருக்கிறார். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபடி காற்றை அனுபவத்திபடி வீடு திரும்புவேன் என தெரிவித்திருக்கிறார். சச்சினின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


 வீடியோவைக் காண:



கிரிக்கெட் என்னும் விளையாட்டின் கடவுள் என்று போற்றப்படும் ஒரு நபர் - இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்தியா மட்டுமில்லை, இவருக்கு உலகெங்கிலும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் உண்டு. அதற்கு முக்கிய  காரணம் இவரின் பேட்டிங் ராஜபாட்டை. ஒருநாள் போட்டிகளில் 18.463 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 34,000 ரன்களை விளாசியுள்ளார். மேலும் சதத்திலேயே சதம் அடித்தும் சச்சின் சாதனை படைத்தவர். இப்படி சச்சின் கிரிக்கெட் உலகில் செய்துள்ள சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் 32 ஆண்டுக்கால பழைய நேர்காணலை திரும்பி பார்த்ததில் சச்சின் மட்டுமல்ல, சச்சின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியே!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண