இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலியின் முடிவுக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ”விராட்


இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014-ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.


மேலும் படிக்க: Dhanush Aishwarya Separated: முடிவுக்கு வந்த 18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை - தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து அறிவிப்பு



தீடிரென நேற்று முன் தினம் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி விலகல் பலரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர். 


கோலி பதவி விலகியதை குறித்து பேசி இருக்கும் பும்ரா, “இந்திய அணியின் தலைவராக கோலி வழிநடத்திச் சென்றிருக்கிறார். கோலி ஆற்றல் மிகுந்தவர். இந்திய அணிக்குள் ஃபிட்னெஸ் பழக்கத்தை கொண்டு வந்தவர், ஒரு அணியாக அனைவரும் ஃபிட்டாக மாறினோம். அவருடைய பங்கு அளப்பறியது. இனியும் அவருடைய பங்கு அதிகமாகவே இருக்கும். அணியின் முக்கியமான வீரர், நீண்ட காலத்திற்கு கேப்டனாக இருந்தவர். அவருடைய பங்களுப்பு அணிக்கு மிக தேவை. கோலி இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும்” என தெரிவித்தார்.


வீடியோவைக் காண:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண