கொரோனா வைரசின் தாக்கம் ஓரளவு உலக நாடுகளில் குறைந்துள்ள நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவும் ஆற்றல் கொண்ட ஒமிக்ரான் வைரஸ் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்டது. அந்த நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.




ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா செல்வதாக திட்டமிடப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.






இதன்படி, இந்தியா தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்க நாட்டின் செஞ்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி அந்த நாட்டின் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள இம்பீரியல் வான்டேரர்ஸ் நகரில் நடைபெற உள்ளது.  


தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள சிக்ஸ்கன் கிரில் நியூலேண்ட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 11-ந் தேதி முதல் 15ந் தேதி வரை நடைபெற உள்ளது.




இதையடுத்து, ஒருநாள் போட்டித்தொடர் ஜனவரி 19-ந் தேதி தொடங்க உள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடராக நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள ஈரோலோக்ஸ் போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.  இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 21-ந் தேதி பார்ல் நகரில் உள்ள மைதானத்திலே நடைபெற உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் உள்ள சிக்ஸ்கன் கிரில் நியூலேண்ட் மைதானத்தில் 23-ந் தேதி நடைபெற உள்ளது.


முன்னதாக, இந்த போட்டித்தொடர் வரும் 17-ந் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஒமிக்ரான் காரணமாக இந்த தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கப்பட உள்ளது. இந்த தொடரை 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டித் தொடராக குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண