சர்வதேச கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகைக் கிரிக்கெட்டுகள் விளையாடப்படுகின்றன. இதில் கிரிக்கெட் போட்டியின் முழுவடிவம் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் தான். டெஸ்ட் கிரிக்கெட் அதிக நாட்களை எடுத்துக்கொள்கின்றது என ஒருநாள் கிரிக்கெட் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிக்கெட் போட்டி சர்வதேச அளவில் அதிக பணம் புழங்கும் விளையாட்டுகளில் ஒன்றாக மாறிப்போனதாலும் ரசிகர்களை தொடர்ந்து மைதானத்திற்கு வரவழைக்க வேண்டும் எனும் நோக்கத்திலும் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. 


100வது டெஸ்ட்:


சர்வதேச அளவில் மூன்று வகைக் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் என்றாலே சர்வதேச அளவில் மட்டும் இல்லாமல், ஒரு அணிக்குள் இருக்கும் மற்ற வீரர்களே வியந்து பார்ப்பார்கள். இப்படியான டெஸ்ட் போட்டியில் 100வது டெஸ்ட்டில் ஒரு வீரர் விளையாடுகிறார் என்றால் அது பெருமைக்குரிய விஷயம்தான். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி சாதனைதான். 






அப்படியான சாதனையை நியூசிலாந்து அணியில் இரண்டு வீரர்கள் படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளைடாடுவதன் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100வது போட்டியில் களமிறங்கியுள்ளனர். இந்த நிகழ்வை கவுரவிக்க நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.


அதில் வில்லியம்சனும் டிம் சவுதியும் தங்களது குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்து பாராட்டை பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் போட்டி நடுவர்கள் கரகோஷம் எழுப்ப இருவரும் தங்களது குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்தனர். 






கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தது.