இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஜானி பேர்ஸ்டோவை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்கச் செய்த விதம்தான் ஹாட் நியூஸாக உள்ளது. இந்த மாதிரியான செயல்கள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு உகந்தது அல்ல என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. 


இதே போன்ற ஒரு நிகழ்வை 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரண்டன் மெக்கல்லம் செய்திருந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? சரியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2005 ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தற்போதைய இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இதே போன்று ஒரு பேட்ஸ்மேனை வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜிம்பாப்வே வீரர் ஒருவர் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்த, சக வீரர் தனது அரைசதத்தை முடித்த மற்ற பேட்ஸ்மேனை வாழ்த்து சொல்ல சென்றார். அப்போது, அந்த வீரர் கிரீஸை விட்டு வெளியேறியபோது, அவரை விக்கெட் கீப்பராக இருந்த மெக்கல்லம் ரன் அவுட் செய்தார். அதற்கு நடுவரும் அவுட் கொடுத்தார். மெக்கல்லத்தின் இந்த ரன் அவுட் முறையும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு தவறானது என பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். 


பிரண்டன் மெக்கல்லம் ரன் அவுட் செய்த வீடியோ: 






சர்ச்சைக்குள்ளான விக்கெட்: 


இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி வித்தியாசமான முறையில் ஸ்டெம்பிங் செய்தார். கீரின் பந்து வீசிய போது அதை எதிர்கொண்ட பேர்ஸ்டோவ் தலைக்கு மேலே செல்வதை கண்டு விலகினார். தொடர்ந்து, பந்தானது விக்கெட் கீப்பர் கேரியிடன் சென்றதற்கு பிறகு, கீரிஸை விட்டு பேர்ஸ்டோவ் வெளியே வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், கேரி ஸ்டம்பிக் செய்து, பேர்ஸ்டோவை அவுட் செய்தார். 






பேர்ஸ்டோவின் இந்த விக்கெட் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பேர்ஸ்டோவின் விக்கெட் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். கேரி இதைச் செய்திருக்கக் கூடாது என்று ஒரு சிலரும், விதிகளின்படி இப்படி விக்கெட்களை வீழ்த்தலாம் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர்.