முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் விவிஎஸ் லட்சுமண் என்.சி.ஏ எனப்படும் தேசிய கிரிக்கெட்  அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று உறுதிப்படுத்தினார். 


இந்திய கிரிக்கெட் அணியில் புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் புதிய தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்தது. கடைசி நாளில் அப்ளை செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை, புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ கடந்த நவம்பர் 3-ம் தேதி அறிவித்தது. 


மேலும் படிக்க: T20 World Cup | இறுதிப்போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணி... கோப்பையை தட்டிப்பறிக்கும் அணி எது..?


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு டிராவிட்டுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் பதவி வகித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் இயக்குனராக விவிஎஸ் லட்சுமணன் தேர்வு செய்யப்படலாம் என அப்போதே பிசிசிஐ தரப்பு தகவல் வெளியானது. இந்நிலையில், தேசிய கிரிக்கெட்  அகாடமியின் இயக்குனராக லட்சுமண் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.






ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ், ஸ்டைலிஷ் பேட்டர் என கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருந்த கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் இப்போது இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், நிறைய திறமையான வீரர்களை இவர்கள் இந்திய அணிக்கு அறிமுகப்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண