இத்தனை ஆண்டுகளில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் ட்வீட்டுக்கு விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். 


 ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அதனை ரீ-ட்வீட் செய்த முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், “இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பாரத் கிரிக்கெட் அணி என குறிப்பிட வேண்டும் எனவும், இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் நமக்கு கொடுத்தது, எனவே, வருகின்ற உலகக்கோப்பைத் தொடரில் நமது கிரிக்கெட் அணி பாரத் என பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும்” என போஸ்ட் செய்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் சேவாக் பதிவிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ட்வீட்டில், வீரேந்திர சேவாக் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை டேக் செய்துள்ளார். இது தவிர, வீரேந்திர சேவாக் பல ட்வீட்களிலும், ட்வீட்டுகளுக்கு பதில்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்ற பெயரை குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து, அதில் இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உற்சாகப்படுத்துவோம் என்றும் சேவாக் ட்வீட் செய்துள்ளார்.






இந்தநிலையில், சேவாக்கின் இந்த போஸ்டுக்கு நடிகர் விஷ்ணு விஷாலும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “சார்! உங்களுக்கு உரிய மரியாதையுடன்!


இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா??” என கேள்வி எழுப்பினார். 






தொடர்ந்து அவர் தனது அடுத்த ட்வீட்டில், “என் படப்பிடிப்பில் ஆழமாக யோசித்தேன்


என்ன ??????
பெயர் மாற்றம் ????
ஆனால் ஏன்?????


இது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் எவ்வாறு உதவுகிறது?
சமீப காலமாக வந்த விசித்திரமான செய்தி இது...


இந்தியா எப்போதும் பாரதமாகவே இருந்தது...
நம் நாட்டை இந்தியா என்றும், பாரத் என்றும் அறிந்தோம்.
ஏன் திடீரென்று இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.