இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து விட்டதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஐபிஎல் தொடரில் குவாலிபையர் -2 ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணி தோற்று வெளியேறியது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகளுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடற்கரையில் அவர் அமர்ந்திருந்தவாறு வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின. 






இதனிடையே கடந்த ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன. இதில் நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மீதமுள்ள போட்டி இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெய்ஸ்டர் அணிக்கு எதிராக ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடவுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பே அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 






இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பயணித்த விமானத்தில் அவர் செல்லவில்லை என தகவல் வெளியானது. அந்த வகையில் மாலத்தீவில் இருந்து மும்பை வந்த விராட் கோலி மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து சென்று பயிற்சி பெற தொடங்கியுள்ளார். இந்நிலையில் மாலத்தீவில் விடுமுறையில் இருந்து திரும்பிய பிறகு விராட் கோலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்திய அணியில் சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுவதால் பிசிசிஐ ஏன் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண