இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரசிகர்களால் ‘கிங்’ என அழைக்கப்படும் விராட் கோலி இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் அவர், மனைவி, மகன், மகளுடன் இந்த பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
‘பர்த் டே பாயானா’ கோலிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளத்தில் வாழ்த்து மழை கொட்டும் இந்த தருணத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுலர்கர் மற்றும் விராட் கோலி இடையே நவம்பர் மாதம் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு சகாப்தத்தைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் தங்களின் திறமையான பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
தற்போது, சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்கள் மூன்று பேரையும் இந்த நவம்பர் தொடர்புபடுத்தியுள்ளது. அது எப்படி என்பதை பார்க்கலாம்.
சுனில் கவாஸ்கர், விரார் கோலி, சச்சின் டெண்டுல்கர்
1. சுனில் கவாஸ்கரின் கடைசி சர்வதேச போட்டி - நவம்பர், 1987
சுனில் கவாஸ்கர் மார்ச் 1971 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் ஹீரோக்களில் ஒருவரான இவர், 13,000 க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்களை அடித்துள்ளார்.
1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்தவர். நவம்பர் 5, 1987 அன்று இங்கிலாந்துக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
2. விராட் கோலி பிறந்த தினம் - நவம்பர் 5, 1988
சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு, அதே தேதியில் கோலி பிறந்தார். தற்போது, கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் தீவிரமாக இருக்கிறார். 2024 ஆம் ஆண்டில், ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
3. இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார் - நவம்பர் 15, 1989
விராட் கோலி பிறந்து ஒரு வருடம் மற்றும் 10 நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார்.
24 வருட கால வாழ்க்கையில், மறக்கமுடியாத சதங்கள் மற்றும் வெற்றிகளால் நிரம்பிய அவர், 100 சர்வதேச சதங்கள் (இதுவரை ஒப்பிட முடியாத சாதனை), 2011 இல் உலகக் கோப்பை வெற்றி மற்றும் சொந்த மண்ணில் ஒரு இறுதி டெஸ்ட் போட்டியுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
2023 ஐசிசி உலகக் கோப்பையின்போது விராட் கோலி அதிக ஒருநாள் சதங்கள் (49) அடித்து சச்சினின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமாக, 2023 ஐசிசி உலகக் கோப்பையின் போது விராட் கோலி அதிக ஒருநாள் சதங்கள் (49) அடித்த சாதனையை முறியடித்தார்.