மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25, வருகிற நவம்பர் 22 அன்று பெர்த்தில் தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு மிக முக்கிய தொடர் என்பதால் கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில், அணியில் சிறப்பாக விளையாடிய சேதேஷ்வர் புஜாரா போன்ற மூத்த வீரர்களின் இடத்தை எப்படி ஈடுக்கட்ட போகிறோம் என்று பல ரசிகர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சேதேஷ்வர் புஜாரா ஆட்டம்:
இந்திய அணி இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் கண்டிப்பாக நிச்சயமாக மிஸ் செய்யும் ஒரு நபர் என்றால் சேதேஷ்வர் புஜாரா. தான். 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக பங்கு வகித்தவர் சேதேஷ்வர் புஜாரா, இது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் இரண்டாவது தொடர் வெற்றியாகும். அவர் நான்கு ஆட்டங்களில் 279 ரன்களைக் குவித்தார், இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்தார். இந்த தொடரில் அவர் அடித்த ரன்கள் என்னவோ குறைவு தான், ஆனால் அவர் விளையாடிய பந்துகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் நீண்ட நேரம் களத்தில் நின்று கட்டையை போட்டது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவர் சாந்தமாக தனது பேட்டிங்கில் மூலம் அவர் எரிச்சலூட்டிய விதம் அந்த தொடரில் இரண்டு அணிக்களுக்குமான பெரிய வித்தியாசமாக பார்க்கப்பட்டது.
பவுலர்களுக்கு தலைவலி கொடுத்த புஜாரா:
அவர் 928 பந்துகளில் விளையாடி 29 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 279 ரன்கள் எடுத்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பந்து வீச்சை சாதுர்யமாக கையாண்டார். குறிப்பாக அவர்களை கையாண்ட விதம், அவர்களின் பந்து வீச்சை அடித்த விதம் மற்ற வீரர்களுக்கு பெரிய உத்வேகமாக இருந்தது.
இதையும் படிஙக:Watch Video : "அடியா இல்ல இடியா.." கூரைக்கு பறந்த பந்து.. வாயடைத்து நின்ற ஹாரிஸ் ராஃப்
அதற்கு முந்தைய தொடரிலும் மூன்று சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருந்தார் புஜாரா. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் தொடரின் 2-1 என்ற இந்தியா அணியின் வரலாற்று வெற்றியிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
36 வயதான செட்டேஸ்வர் புஜாரா ஆஸ்திரேலியாவில் தான் விளையாடிய 11 ஆட்டங்களில் 993 ரன்கள் குவித்து 47.28 என்ற சிறந்த சராசரியும் வைத்துள்ளார், இதில் மூன்று நூறு மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும்.