விராட் கோலிக்கு சோலே பட்டூர் என்ற வட இந்திய உணவு மிகவும் பிடித்தமான உணவாகும். அதன் மீது அவருக்குள்ள அபரிமிதமான காதல் என்பது பலர் அறிந்த ஒன்று. 'Chole Bhature' என்பது ஒன்றுமில்லை, பூரியும், சன்னா (கொண்டைக்கடலை) கிரேவியும்தான், டெல்லியில் மிகவும் பிரபலமான இந்த உணவு வட இந்திய மசாலாக்கள் ஃபிளேவரில் மிகவும் சுவையாக இருக்குமாம். தனக்குப் பிடித்த சோலே பட்டூர் வந்த உடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி சோலே பட்டூராவை மிகவும் பிடித்த உணவென்று பலமுறை குறிப்பிட்டுள்ளார், அதுமட்டுமின்றி அவர் தனது சொந்த ஊரில் இருப்பதால், அவர் விரும்பும் உணவை கேட்டு வாங்கி ருசிப்பதாக தெரிகிறது.



விராட் கோலியின் பிடித்தமான உணவு


விராட் தனது உடற்தகுதிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாலும், உலகெங்கிலும் உள்ள பல விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாலும், அடிக்கடி அவர் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது இல்லை. புது தில்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின்போது, அரிதாக அந்த உணவை கேட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இரண்டாம் நாள் ஆட்டமான் நேற்று மதியம் இது நடந்தது. டிரஸ்ஸிங் ரூமுக்குள் சோலே பட்டூராவை பார்த்த கோலியின் ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: அவுட்டா? இல்லையா? சர்ச்சைக்குள்ளான விராட் கோலி விக்கெட்! நடுவரை விளாசும் ரசிகர்கள்!


விராட் கோலி ரியாக்ஷன்


பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கான உணவு தயாராகிவிட்டது என்று அதனை கொண்டு வந்து அவரிடம் ஒருவர் காண்பிக்கிறார். அதனை பார்த்த உடனே உற்சாகமான கோலி, கையை தட்டி வரவேற்கிறார். பின்னர் 'உள்ளே வையுங்கள், வருகிறேன்' என்பது போல சைகை செய்கிறார். பின்னர் டிராவிட்டையும் அதனை சாப்பிட அழைத்ததாக போட்டி முடிந்ததும் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். 2வது டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு அவ்வளவாக அமையவில்லை. இந்திய பேட்டிங்கை பிரமிக்க வைத்த நாதன் லயன் முன் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் சரிந்தது. இருப்பினும், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் அக்சர் படேல் இடையேயான 114 ரன் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் இன்னிங்ஸை மீட்டெடுத்தது மற்றும் விளையாட்டில் அவர்களின் நம்பிக்கையை உயிர்ப்பித்தனர்.










இந்திய அணி வெற்றி


இந்த போட்டியில் விராட் மட்டுமே டாப் ஆர்டரில் ஓரளவுக்கு நிலையாக ஆடினார். 44 ரன்கள் எடுத்த அவர் அம்பயர் நிதின் மேனனின் ஒரு சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ முடிவால் களத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும் வழக்கம்போல ஸ்பின் மீட்பர்கள் வந்து காப்பாற்றி இந்திய அணியை 262 ரன்களுக்கு இழுத்து சென்றனர். ஒரு ரன் மட்டுமே முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி அதனையும் காப்பாற்றிக் கொள்ள தவறி, ஜடேஜாவின் சூழல் மந்திரத்தில் இரண்டாவது இன்னிங்சில் ஒட்டுமொத்தமாக சரிந்தது ஆஸ்திரேலியா. அதுவும் வெறும் 11 பந்துகளில் 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து மேட்சை விட்டது. கடந்த போட்டியை போலவே ஒரே செஷனில் மளமளவென விக்கெட்டுகள் விட்டதால் வெறும் 113 ரன்கள் மட்டுமே குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் புஜாரா நிலைத்து ஆட, அவருடன் விராட் கோலி மற்றும் கே.எஸ்.பாரத் சிறிய சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு இழுத்து சென்றனர். இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியையும் இரண்டரை நாட்களில் முடித்து, தொடரில் 2-0 என்ற வகையில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த டெஸ்டிற்கு ஏற்கனவே 1 வார கால இடைவெளி இருந்த நிலையில் இப்போது மேலும் இரண்டு நாள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.