ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு முன்பாக பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயமடைந்ததாக கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் மோதவுள்ளது. இதற்காக இரு அணியினரும் தீவிர வலைப்பயிற்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுப்பட்டு வந்தனர். 2000 ஆம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி மோதலுக்கு பின்பு இரு அணிகளும் தற்போது இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.
கோலி காயம்:
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலைப் பயிற்சியின் போது, இந்திய அணியிம் மூத்த வீரர் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டார். அப்போது வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொண்டு பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது காயம் ஏற்பட்டது. அவரது முழங்காலுக்கு அருகில் பந்து தாக்கப்பட்டதால், பயிற்சியில் இருந்து பாதியிலேயே திரும்பும் நிலை ஏற்ப்பட்டது. இந்திய பிசியோதெரபிஸ்டுகள் அவருக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வந்து, ஸ்ப்ரே தடவி, பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு கட்டுப் போட்டு சுற்றினர்.
இதையும் படிங்க: IND vs NZ: ரோகித் பாய்ஸ் ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
அதன் பிறகு அசௌகரியம் இருந்தபோதிலும், கோஹ்லி மைதானத்திலேயே இருந்து, மீதமுள்ள பயிற்சி அமர்வை உன்னிப்பாகக் கவனித்தார். அவர் பயிற்சியை கவனித்தது அவரது சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு காயம் பெரியதல்ல என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், கோலி நன்றாக இருப்பதாகவும், இறுதிப் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார் என்றும் இந்திய நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
சாம்பியன்ஸ் டிராபியில் கோலி:
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்தியாவின் இறுதிப் போட்டிக்கான பயணத்தில் கோலி முக்கிய பங்கு வகித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், முக்கியமான அரையிறுதிப்போட்டியில் 84 ரன்களும் அடித்து இந்தியாவை கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீட்டு, சேஸ் மாஸ்டர் என்ற அவரது பெயரை மீண்டும் நிரூப்பித்து காட்டினார்.