இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது விராட் கோலி பந்தை அடித்து விட்டு ஓட முயற்சி செய்தார். அப்போது மறுமுனையில் நின்று கொண்டிருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓடாமல் இருந்தார். எனினும், பாதி தூரம் வரை ஓடி வந்து விட்டு மீண்டும் தனது இடத்தை நோக்கி பாய்ந்து விழுந்து ஆட்டமிழக்காமல் தப்பித்தார்.


எனினும், அவர் ஆட்டமிழக்காமல் தப்பித்ததை தொடர்ந்து ரிஷப் பண்டை திரும்பி முறைத்துப் பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.


முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி கண்டது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சில் 73.5  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது.


இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 86.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது.


இந்திய அணியின் தொடக்க ஜோடியான கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தைஜுல் இஸ்லாம் பந்து வீச்சில் அடுத்தடுத்து எல்.பி.டபள்யூ ஆகி  வெளியேறினர்.  30  ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. 


இந்திய அணியின் தொடக்க ஜோடியான கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தைஜுல் இஸ்லாம் பந்து வீச்சில் அடுத்தடுத்து எல்.பி.டபள்யூ ஆகி  வெளியேறினர்.  30  ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. 


நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த புஜாரா, தைஜூல் இஸ்லாம் வீசிய பந்தை  ஷார்ட் லெஜ் சைடில் அடிக்க அதனை மிகவும் சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் மௌமினல். இதனால் 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து புஜாரா ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். 


இந்த ஆட்டத்தின்போது கோலியும், ரிஷப் பண்ட்டும் பார்ட்னர்ஷிப்பில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோலி ரன் எடுக்க ஓடியவோது மறுமுனையில் இருந்து ரிஷப் பண்ட் ஓடிவரவில்லை. இதையடுத்து, மீண்டும் ஓடி தனது இடத்தில் நின்றார் கோலி. அப்போது ரிஷப் பண்ட்டை முறைத்துப் பார்த்தார்.






இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆட்டத்தில் கோலி, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்டச் 93 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றார்.