இந்திய கிரிக்கெட் அணியில் உச்ச நட்சத்திர பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலிதான். அதிரடியான ஆட்டம் மூலம் ரன் மெஷின் என கிரிக்கெட் உலகமே அழைக்கும் அளவிற்கான வெறித்தனமான ஆட்டக்காரர். எப்போதும் அதிரடி ஆட்டத்துக்கும் ஃபிட்னஸ்க்கும் அதிகம் ட்ரெண்ட் ஆகும் விராட் கோலி அவ்வப்போது தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதும் அவர்களுடன் டிரக்கிங் செல்வதும் கூட அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும். 


ஆனால் சமீபகாலமாக விராட் கோலி குறித்து தவறான தகவல்கள் ஊடகங்களில் வருவதும் அதற்கு அவர் பதிலடி கொடுப்பதுமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது விராட் கோலிக்காக அவரின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மா தனி கிரிக்கெட் மைதானம் உருவாக்கி வருவதாகவும் அதன் வேலைகளில் அனுஷ்கா மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும் அதனை விராட் கோலியின் பிறந்த நாளுக்கு பரிசாக தரப்போவதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.




இந்த செய்திகளைப் பார்த்த விராட் கோலி மிகுந்த கோபத்துக்கு ஆளாகி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஆங்கில ஊடகத்தில் செய்தியை சுட்டிக்காட்டி, "செய்தித்தாள்கள்" சிறுவயதில் இருந்தே படிக்கிறேன், ஆனால் இப்போது பொய்யான செய்திகளையும் வெளியிட ஆரம்பித்து விட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். 






இதற்கு முன்னதாக விராட் கோலி, ஒரு தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 14 கோடி ரூபாய் வரை வாங்குகிறார் என்று சமீபத்தில் ஊடகங்களில் வந்த கட்டுரைகளுக்கு கோலி பதிலளித்தார். ஹாப்பர் ஹெச் கியூ என்ற நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் என்று கூறப்பட்டு வைரலான செய்திகளில் இந்த தகவல் தீயாக பரவியது. அதில் உலக அளவில் ஒரு பதிவுக்கு அதிக பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை மூன்றாவது இடத்தில் இருந்தார். முதல் இடத்தில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. அவர் 26.7 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்பட்டிருந்தது. அடுத்ததாக மெஸ்ஸி 21.5 கோடி ரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களுக்கு அடுத்தது விராட் கோலியின் பெயர் இருந்தது. அவர் 11.45 கோடி ரூபாய் வாங்குவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 


செய்தியை மறுத்த கோலி


இதையடுத்து கடந்த சனிக்கிழமை அதாவது ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி காலை ட்விட்டரில், விராட் கோலி தனது சமூக ஊடக வருவாயை உண்மையல்ல என்று கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். X எனப்படும் டிவிட்டரில் அவர் பதிவிட்ட ஒரு போஸ்டில், "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும் கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன், ஆனால் எனது சமூக ஊடக வருவாய் குறித்து சுற்றி வரும் செய்திகள் உண்மையல்ல" என்று குறிப்பிட்டார்.