இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவது போல கிரிக்கெட் பிரபலமாக உள்ள நாடுகளில் பல்வேறு டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் காஷ்மீர் பிரிமீயர் லீக் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் இயக்குனராக ரஷீத் லதீப் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். அவர் இந்தியா – பாகிஸ்தான் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காஷ்மீர் பிரிமீயர் லீக்கில் விளையாட விராட்கோலிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ரஷீத்லதீப் கூறியிருப்பதாவது, நாங்கள் கண்டிப்பாக விராட்கோலிக்கு காஷ்மீர் ப்ரிமீயர் லீக்கில் ஆட அழைப்பு விடுப்போம். ஆனால், விளையாட வேண்டுமா? இல்லையா? என்பது அவரது தனிப்பட்ட கருத்து. நாங்கள் பி.சி.சி.ஐ. உள்பட அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் அழைப்பு விடுப்பது குறித்து அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த தொடரின் தலைவரான ஆரீப் மாலிக்,” இந்த தொடரின் இரண்டாவது சீசனுக்கு விராட்கோலியை கண்டிப்பாக அழைப்போம். எல்லைகளை கடந்து அனைவரும் அமைதியான மன நிலையில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் விராட்கோலிக்கு கடிதம் எழுதுகிறோம். அவர் மிகச்சிறந்த வீரர். பாபர் அசாமும், ஷாகின் அப்ரீடியும் சர்வதேச தரம்வாய்ந்த வீரர்கள். அமைதியை பற்றி பேசும்போது அனைவரும் ஒரே பக்கம் நிற்பார்கள்.
விராட்கோலி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தொடரில் அவர் வீரராகவோ அல்லது சிறப்பு விருந்தினராகவோ பங்கேற்க வேண்டும் என்பது அவரைப் பொறுத்தது. இரு பக்கத்திலும் இருந்து வீரர்களை அழைத்து நாங்கள் அமைதியை நாங்கள் பரப்புவோம். “ என்று தனது முகநூல் பக்கத்தில் பரப்பியுள்ளார்.
இந்திய வீரர்கள் ஐ,பி.எல். தொடரில் மட்டும் ஆடுகின்றனர். பிக்பாஸ் லீக், கரிபீயன் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் பங்களாதேஷ் ப்ரிமீயர் லீக் ஆகிய தொடர்களில் ஆடுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிற நாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்