தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.


இந்தியா - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் ஜூன் 9ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. அன்ரிச் நார்ட்ஜே டெம்பா பெவுமா தலைமையிலான அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முதல் முறையாக அணியில் இடம்பிடித்துள்ளார். 16 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான தென்னாப்பிரிக்க வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி மே 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


தென்னாப்பிரிக்க டி20 அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், டிரிஸ்டன் ப்ரிடோரியஸ், ட்ரைஸ்டன் ரபஹாம் , ரசி வான் டெர் டுசென், மார்கோ ஜான்சென்.


இங்கிலாந்து  சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து, முக்கிய வீரர்கள் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், கே.எல் ராகுல், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வெடுக்கின்றனர்.


தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில், ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இடம் கொடுக்கலாம். ஷிகர் தவான் தலைமையில் திலக் வர்மா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடிக்கலாம். தேர்வுக்குழு கூட்டத்திற்கு முன், ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த சூர்யகுமார் யாதவின் உடல்நிலை குறித்தும் பரிசீலிக்கப்படும்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் அணி ஜூன் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் அயர்லாந்தில் டி20 போட்டிகளில் விளையாடும் என்றும், மூத்த வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பிஸியாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.


IND vs SA T20 தொடர் முழு அட்டவணை


1வது டி20 போட்டி, ஜூன் 9ம் தேதி டெல்லியில் நடக்கிறது


2வது டி20 போட்டி, ஜூன் 12ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது


3வது டி20 போட்டி, ஜூன் 14ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது


4வது டி20 போட்டி, ஜூன் 17 ராஜ்கோட்டில் நடக்கிறது


5வது டி20 போட்டி, ஜூன் 19ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண