இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்திய அணி 325 ரன்களுக்கு தன்னுடைய அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டையும் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் எடுத்து சாதனைப் படைத்தார்.


இதைத் தொடர்ந்து நேற்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் மீண்டும் சிறப்பாக பந்துவீசிய அஜாஸ் பட்டேல் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 7விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அத்துடன் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 






இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது நியூசிலாந்து அணி 13 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில் மைதானத்தில் இருந்த ஸ்பைடர் கேமரா கீழே இறங்கியிருந்தது. அதற்கு பின்பு அந்த கேமராவை மேலே இழுக்க முயற்சி மேற்கொள்ள பட்டது. எனினும் அந்த கேமராவை மேலே இழுக்க முடியவில்லை. 




இதனால் மைதானத்தில் இருந்த இந்திய வீரர்கள் சிலர் அந்த கேமராவிடம் வந்து சில சேட்டைகளை செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர் அஸ்வின் அந்த கேமரா மேலே ஏற்ற உதவி செய்ய முயற்சித்தார். அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் அங்கு வந்து சில செய்கைகளை காட்டினார். கடைசியாக இந்திய கேப்டன் விராட் கோலி அங்கு வந்து என்ன கொடுமை சார் இது என்று ப்ரேம்ஜி கேட்கும் வகையில் ஒரு செய்கை செய்தார். 


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த ஸ்பைடர் கேமரா நடுவில் இருந்ததால் தேநீர் இடைவேளை சீக்கிரமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பட் பட்டென்று 14 விக்கெட் அள்ளி பல சாதனைகளை படைத்த பட்டேல்.. ! இம்முறை படைத்த சாதனை என்ன?