பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் ஸ்டையிலை இளைஞர்கள் காப்பி அடிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களின் ஸ்டையில் அப்படியே காப்பி அடித்து பந்துவீசுவதை ஒரு சில இளம் வீரர்கள் செய்வார்கள். முன்பு எல்லாம் மெக்ராத், ஆலன் டொனால்ட், பொல்லக், ஃபிளின்டாஃப், கிலெஸ்பி, மலிங்கா உள்ளிட்ட வீரர்களின் பந்துவீச்சு முறையை சிலர் காப்பி அடிப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சிறுவன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை போல் பந்துவீசும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஒரு கிரிக்கெட் வீரர் அடுத்த தலைமுறையை ஈர்ப்பார் என்று நாம் தொடர்ந்து கூறி கொண்டே வருவோம். அதற்கு ஒரு சான்று தற்போது கிடைத்துள்ளது. நான் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற கொண்டிருந்த போது ஒரு சிறுவன் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா போல் பந்துவீசுவதை பார்த்தேன். அவர் அப்படியே வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை போல் பந்துவீசினார். இது தான் பும்ரா இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம்.
நான் அந்த சிறுவனிடம் சென்று இது குறித்து கேட்டேன். அதற்கு அவர் இப்படி பந்துவீசுவது தான் எனக்கு எளிதாக உள்ளது. அத்துடன் அதிகமாக ஸ்விங்கையும் தருகிறது என்று கூறினார்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: டி20 உலகக் கோப்பை 2022 அட்டவணை: பாக். எதிராக மீண்டும் முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா !