உலகப்புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது. நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.


முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கவாஜா 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


 



அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 294 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஜானி பார்ஸ்டோ 158 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 113 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 91 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 66 ரன்களும் குவித்தனர். இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணியில் மீண்டும் கவாஜா சதம் எடுத்து அசத்தினார்.


இந்தநிலையில், கவாஜா கடந்த 2011 ம் ஆண்டு இங்கிலாந்து பந்து வீச்சாளர்  க்றிஸ் ட்ரேம்லெட் பந்துவீச்சில் லெக் சைடு அடித்த பந்து போலவே, தற்போது மார்க் வுட் பந்தில் அடித்த சாட் வைரலாகி வருகிறது. பலரும் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் இருக்கும் என்று சும்மாவா சொன்னாங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 



தற்போது இங்கிலாந்து அணி 388 ரன்கள் இலக்குடன் ஆடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை எடுத்துள்ளது.


முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


இரண்டாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


மூன்றாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


நான்காவது டெஸ்ட்: ஜனவரி 5-9, SCG


ஐந்தாவது டெஸ்ட்: ஜனவரி 14-18, பிளண்ட்ஸ்டோன் மைதானம் 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண