வெஸ்ட் இண்டீஸில் அடுத்த மாதம் U19 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, U19 ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, குவைத், வங்கதேசம், நேபால் அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம் பிடித்திருக்கின்றன.


இந்நிலையில், லீக் சுற்று போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது அரபு அணி. இதனால், முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஓப்பனிங் பேட்டர் ஹர்னூர் சிங் 120 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரை அடுத்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்டர்கள் சையிக் ரஷீத் (38), யஷ் துல் (63), ராஜவர்தன் (48*) ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு 282 ரன்களை பெற்று தந்தனர்.






அதனை அடுத்து, இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய அரபு அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி, 34.3 ஓவர்களை மட்டும் எதிர்கொண்டு, 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அதிரடி காட்டியது.


இதனால், லீக் சுற்றை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. அடுத்த போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி, டிசம்பர் 25-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டி காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ளது. 


லீக் சுற்றின் மற்ற போட்டிகளைப் பொருத்தவரை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானும், குவைத்துக்கு எதிரான போட்டியிலும் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண