ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த நாடுகளின் பட்டியலில், உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆசியக்கோப்பையை வென்ற இந்தியா:
ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய இலங்கை அணி, வெறும் 50 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் எளிதில் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்த நிலையில், ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகளின் பட்டியலில் இலங்கை அணி 10வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஸ்கோர்:
1) ஜிம்பாப்வே - 2004 இல் ஹராரேயில் இலங்கைக்கு எதிராக 18 ஓவர்களில் 35 ரன்களுக்கு சுருண்டது
2) அமெரிக்கா - 2020 இல் கிர்திபூரில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 12 ஓவர்களில் 35 ரன்களுக்கு சுருண்டது
3) கனடா - 2003 இல் பார்லில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 18.4 ஓவர்களில் 36 ரன்களுக்கு சுருண்டது
4) ஜிம்பாப்வே - 2001 இல் கொழும்புவில் இலங்கைக்கு எதிராக 15.4 ஓவர்களில் 38 ரன்களுக்கு சுருண்டது
5) இலங்கை - 2012 இல் பார்லில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20.1 ஓவரில் 43 ரன்களுக்கு சுருண்டது
6) பாகிஸ்தான் - 1993ல் கேப்டவுனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 19.5 ஓவரில் 43 ரன்களுக்கு சுருண்டது
7) ஜிம்பாப்வே - 2009 இல் சட்டோகிராமில் வங்கதேசத்திற்கு எதிராக 24.5 ஓவர்களில் 44 ரன்களுக்கு சுருண்டது
8) கனடா - 1979 இல் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக 40.3 ஓவர்களில் 45 ரன்களுக்கு சுருண்டது
9) நமீபியா - 2003 இல் போட்செஃப்ஸ்ட்ரூமில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஓவர்களில் 45 ரன்களுக்கு சுருண்டது
10) இலங்கை - 2023 இல் கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு சுருண்டது
மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் பெரும்பாலானவை வளர்ந்து வரும் நாடுகளாக தான் உள்ளன. அதேநேரம், உலகக்கோப்பையை வென்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்த மோசமான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதிலும், இலங்கை அணி இரண்டு முறை மிகக்குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆகி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.