தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  வெற்றி பெரும் அணிக்கு கோப்பையுடன் பரிசுத்தொகை ரூபாய் ஒரு கோடி ரூபாய் வழங்கபபடவுள்ளது. 


இந்திய நேரப்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெறும். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 2016ஆம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், 2017ஆம் ஆண்டு டுடி பைரேட்ஸ் அணியும் கோப்பையை வென்றது. அதன் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கோப்பைத் தட்டிச் சென்றது. 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தொடர் நடத்தப்படவில்லை. 2021ஆம் ஆண்டு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி கோப்பையில் தனது பெயரை பதித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சேப்பாக் அணியும் கோவை அணியும் மோதிக்கொண்டது. மழை காரணமாக போட்டி முழுமையாக நடைபெறாததால் இரு அணிகளுக்கும் கோப்பை பிரித்து அளிக்கப்பட்டது. 


இதனால் இம்முறை இறுதிப்போட்டியில் போட்டியை வென்று கோப்பையை வெல்லும் அணி போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் புதிய அணியாக இருக்கும். இரு அணிகளும் கோப்பையை கைப்பற்ற முழு முனைப்புடன் களமிறங்கும் என்பதால் போட்டி தீவிரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 


திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1ஐ வென்ற பிறகு TNPL 2023 இன் இறுதிப் போட்டிக்கு Lyca Kovai Kings நேரடியாக முன்னேறியது. தொடர் முழுவதும் பரபரப்பான ஃபார்மில் இருந்ததால்,  தொடர்ந்து இரண்டாவது முறை கோவை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.  அதேபோல் நெல்லை ராயல் கிங்ஸ் எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 ஐ வென்று இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது.  


பிட்ச் அறிக்கை


இந்தியா சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மொத்தம் எட்டு போட்டிகள் இதுவரை நடந்துள்ளன, முதலில் பேட்டிங் செய்த அணி, நான்கு முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் எடுத்தால் தால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். டாஸ் வெல்லு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது இந்த ஆடுகளத்தில் வெற்றி வாய்ப்பை எட்டுவதற்கான முடிவுகளில் ஒன்றாக இருக்கும். 


பரிசுத்தொகை விபரங்கள்


வெற்றி பெறும் அணிக்கு - ரூபாய் ஒரு கோடி,


இரண்டாவது இடம் பெறும் அணிக்கு - ரூபாய் 75 லட்சம்,


இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் தோல்வி அடைந்த அணிக்கு  - ரூபாய் 40 லட்சம், 


மற்ற அணிகள் அனைத்திற்கும் ரூபாய் 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 


ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் விவரங்கள்: 


இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டீவியிலும், ஃபேன்கோட் தளத்திலும் பார்க்கலாம்.