Viral Video  TNPL 2022:  தமிழக அளவில் நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் போது தினேஷ் கார்த்திக் என கத்திய ரசிகர்களிடம் தயவு செய்து நிறுத்துமாறு கும்பிட்டுக் முரளி விஜய்  கேட்டுக் கொண்டுள்ளார். 

Continues below advertisement


தமிழக அளவில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டியில் மிகவும் பிரபலமானது TNPL ( Tamil Nadu Premier League ). இந்த ஆண்டு நடந்து வரும் TNPL ஆறாவது சீசனில் பல்வேறு புதிய வீரர்களும், சர்வதேச அளவில் விளையாடிய வீரர்களும் இணைந்து பல்வேறு மிரட்டலான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். 


சர்வதேச அளவிலும் சரி, உள்ளூர் அளவிலும் சரி வீரர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து அளிக்கப்படும் ஊக்கம் மிகவும் உத்வேகமாக இருக்கும். குறிப்பாக களத்தில் வீரர்கள் விளையாடிக்கொண்டு இருக்கையில் ரசிகர்கள் தரப்பில் இருந்து அளிக்கப்படும் உத்வேகம், வீரர்களுக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்தும். அதேநேரத்தில், அவ்வப்போது  வீரர்களின் கவனத்தினை ஆட்டத்தில் இருந்து திசை திருப்பி, களத்தில் வீரர்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தவும் ரசிகர்கள் கூச்சலிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள், சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் பல்வேறு வீரர்களுக்கு ஏற்பட்டு, அது குறித்து வீரர்கள் பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்து பேசியும் உள்ளனர். 






அந்த வரிசையில் தற்போது  TNPL 2022 சீசனில் சமீபத்திய போட்டி ஒன்றில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.  திருச்சி வாரியர்ஸ் அணி மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது, திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர் முரளி விஜய் பவுண்ட்ரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டு இருந்த போது ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் பெயரை “DK…DK” என கத்திக்கொண்டு இருந்தனர். முதலில் கைதட்டிய முரளி விஜய், பின்னர் கும்பிட்டு வேண்டாம் என கேட்டுக் கொண்டார். தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய்க்கு இடையில் நடந்த பல தனிப்பட்ட நிகழ்வுகளை மனதில் வைத்து ரசிகர்கள் முரளி விஜயை அசௌகரியப் படுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.  இந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக வைரல் ஆகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.