தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டி.என்.பி.எல். நடைபெற்று வருகிறது. நடப்பு டி.என்.பி.எல். தொடர் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் நெல்லை அணியின் வெற்றிக்கு ஆர்யா யோஹன் மேனன் முக்கிய காரணமாக இருந்தார்.
சிறப்பாக பந்துவீசிய ஆர்யன்யோஹன் மேனன் பிரபல தமிழ் திரையுலகின் இயக்குனரான கவுதம் மேனனின் மகன் ஆவார். ஆர்யா யோஹன் மேனன் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் செய்தார்.
குறிப்பாக, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்யாயோஹன் பவர்ப்ளேவில் மிகவும் அட்டகாசமாக பந்துவீசினார். அவர் பவர்ப்ளேவில் மட்டும் 2 ஓவர்கள் வீசி 15 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 19 வயதான ஆர்யாயோஹன் லைன் மற்றும் லென்த்தில் மிகவும் அற்புதமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி அளித்தார். அவரது பந்துவீச்சில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் ஜாஃபர் ஜமால் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், துடிப்பான பீல்டிங் மூலம் பிரசன்னாவையும் ரன் அவுட் செய்தார்.
நெல்லை அணிக்காக நேற்று தனது முதல் டி.என்.பி.எல். போட்டியில் ஆடிய ஆர்யயோஹன் “வலைப்பயிற்சியில் எனது பந்துவீச்சைக் கண்ட பயிற்சியாளர் சண்முகம் சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து, அவர் எனக்கு அணியில் களமிறங்க வாய்ப்பு அளித்தார். இதனால், அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் ஆடிய சேலம் அணி பெர்ராரியோவின் அதிரடியால் 149 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய நெல்லை அணி அஜீதேஷ் 5 சிக்ஸர்களை விளாசியதால் 18வது ஓவரிலே 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற நெல்லை அணிக்கும், நெல்லை அணிக்காக அறிமுகப்போட்டியில் களமிறங்கிய கவுதம் மேனன் மகன் ஆர்யாயோஹன் மேனனுக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க : IND vs ENG 5th Test: இந்திய அணிக்கு மீண்டும் கேப்டன் ஆகிறாரா விராட்கோலி..? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
மேலும் படிக்க : IND vs IRE T20 : இந்திய அணியை சமாளிக்குமா அயர்லாந்து..? டப்ளின் நகரில் இன்று முதல் டி20 போட்டியில் மோதல்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்