இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியுடன் டி20 தொடரில் ஆடுவதற்காக ஹர்திக்பாண்ட்யா தலைமையில் அயர்லாந்து சென்றுள்ளது. இந்த நிலையில் அயர்லாந்து அணியுடன் இந்தியா மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.


அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள வில்லேஜ் என்ற பகுதியில் இந்த போட்டி நடைபெற உள்ளது. அயர்லாந்து அணியுடன் மோததும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் அசத்திய இஷான் கிஷான் இன்றைய போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.




மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஐ.பி.எல். போட்டியில் அசத்திய சூர்யகுமார்யாதவ் இன்றைய போட்டியில் விளாசுவார் என்று நம்பலாம். ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு ராஜஸ்தானை அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் கிடைத்துள்ள வாய்ப்பை இந்த போட்டியில் அற்புதமாக பயன்படுத்திக்கொள்வார் என்று நம்பலாம். அவர் தொடக்க வீரராக இறங்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.


இந்திய அணியின் புதிய பினிஷராக உருவெடுத்துள்ள தினேஷ்கார்த்திக் கடைசி கட்டத்தில் அதிரடியில் கைகொடுப்பார் என்று நம்பலாம். பந்துவீச்சில் புவனேஷ்குமார் வேகப்பந்துவீச்சை வழிநடத்துவார். அவருக்கு ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான் ஆகியோர் ஒத்துழைப்பார்கள் என்று நம்பலாம். உம்ரான் மாலிக் இந்த போட்டியில் அறிமுகம் ஆவதற்கு வாய்ப்புள்ளது.




அயர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் அவர்கள் கிரிக்கெட் உலகில் அறிமுகம் ஆனது முதல் முன்னணி அணியினருக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மிரட்டலான அணியாகவே உள்ளனர். அந்த அணிக்கு பால் ஸ்டிர்லிங் மிகவும் முக்கியமான வீரராக உள்ளார். லோர்கன் டக்கர், கேப்டன் பால்ப்ரைன், ஹாரி டெக்டர், காம்பெர் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பந்துவீச்சில் மெக்கரத்தி, ஜோஷ்வா, ஸ்டீபன் டோனி ஆகியோர் சிறப்பாக வீச வேண்டியது அவசியம்.


அயர்லாந்து அணியை காட்டிலம் இந்திய அணி பலமிகுந்த அணியாக இருந்தாலும் ரோகித்சர்மா, விராட்கோலி, பும்ரா, ரிஷப்பண்ட், ஜடேஜா, கே.எல்.ராகுல் இல்லாததால் இந்திய அணி கவனத்துடன் ஆட வேண்டியது அவசியம் ஆகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண