அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்:


உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இவர் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடிவருகிறார். அதன்படி, இதுவரை 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 725 ரன்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அனைவரின் கவனமும் இவர் மீது திரும்பியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.


இதனையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமானர். அதேபோல், சர்வதேச டி20 போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமானர். அதன்படி, இதுவரை 2 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 55 ரன்கள் எடுத்துள்ளார். 15 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 356 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக இந்திய அணியின் பினிஷராக பார்க்கப்படுகிறார். இதன்மூலம் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.


கேஸ் டெலிவிரி செய்யும் ரிங்கு சிங்குவின் தந்தை:






இப்படி ஐபிஎல் தொடர், டி20 போட்டிகளில் கலக்கி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் வேளையில் அவரது தந்தை இன்றளவும் கேஸ் விநியோகம் செய்து வருகிறார். என்னதான் சர்வதேச அளவில் தன்னுடைய மகன் கிரிக்கெட் விளையாடி பொருளாதாரத்தில் முன்னேறி வந்தாலும் தன்னுடைய பழைய வேலையை மறக்கமல் அவர் கேஸ் விற்பனை செய்து வரும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


முன்னதாக ரிங்கு சிங் அளித்த பேட்டி ஒன்றில்,  "நான் ஐபிஎல் தொடரில் தேர்வாகி எனக்கு சம்பளம் கிடைத்த பிறகு எனது தந்தையை ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினேன். ஆனால் அவர் எப்போதுமே வேலை செய்து பழகி விட்டதால் வாழ்க்கை முழுக்க இந்த வேலையை செய்யப்போவதாக கூறி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். எனவே அவரது அந்த முடிவை நானும் தடுக்கவில்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: IND vs ENG Test: முதல் இன்னிங்ஸ்... இங்கிலாந்தை விட வலுவாக இருக்கும் இந்திய அணி... விவரம் உள்ளே!


 


மேலும் படிக்க: Shoaib Malik: சானியா மிர்ஷாவுடன் விவாகரத்து: 3வது திருமணம் நடந்ததும் சோயப் மாலிக்கிற்கு ஏற்பட்ட சோகம்!