Asia Cup 2022 Schedule: 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான போட்டி அட்டவணையினை பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகஸ்ட் 28ம் தேதி மோதவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இதைபோலவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு செய்தி என்றால், அது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திர அணி விளையாட உள்ளது.
Legends League Cricket: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணிக்காக அதிரடி ஆட்டக்காரர்கள் கங்குலி, ஷேவாக் ஆகியோர் களமிறங்கவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
இந்தியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடக்கவுள்ள லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் உட்பட மொத்தம் ஆறு மைதானங்களில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, ராஜ்கோட், லக்னோ, ஜோத்பூர் மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வீரர்கள் ஒரு அணியிலும், பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேசம் அணி வீரர்கள் ஒரு அணியிலும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியுசிலாந்து அணி வீரர்கள் ஒரு அணியிலும் களமிறங்க உள்ளனர். அதாவது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் இந்திய மகாராஜ்ஸ் அணியில் களமிறங்க உள்ளனர். பாகிஸ்தான், இலங்கை, வங்களதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் முன்னணி வீரர்கள் இணைந்து ஆசியா லைன்ஸ் என்ற அணியில் விளையாட உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியுசிலாந்து அணிகளின் முன்னாள் வீரர்கள் வோர்ல்ட் கெயிண்ட்ஸ் என்ற அணியிலும் இணைந்து விளையாட உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்