இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தற்காலிக அணியை சமீபத்தில் அறிவித்தது. இந்த அனியில் இளம் வீரரான ஹாரி புரூக்கின் பெயர் இடம் பெறாதது அனைவரையும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஆழ்த்தியது. 


உலகக்கோப்பை:


இப்போது இவரே தி ஹன்ட்ரட் லீக் தொடரில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் தேர்வாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.


நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியுடன் தற்காலிக உலகக் கோப்பை அணியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐசிசி விதிகளின் படி, செப்டம்பர் 27ம் தேதி வரை இங்கிலாந்து அணி உள்பட போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்கள் அணியில் ஒருசில மாற்றங்களை செய்து கொள்ளலாம். உலகக் கோப்பைக்கான இங்லிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் திரும்பிய நிலையில், ஹாரி புரூக் இடம் பெறவில்லை. 


ஹாரி ப்ரூக் சதம்:


இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹன்ட்ரட் லீக் தொடரில் ஹாரி புரூக் 41 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு முனையில் விக்கெட்கள் சரசரவென விழுந்தாலும் மறுமுனையில் வேகமாக ரன் குவித்த புரூக், 42 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் எடுத்தார். புரூக்கைத் தவிர, அவரது அணியின் வேறு எந்த வீரரும் இரட்டை இலக்கத்தைக் கூட எடுக்க முடியவில்லை. 






அதிவேக சதம்:


 'தி ஹன்ட்ரட்’ வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனை ஹாரி புரூக் பெயரில் பதிவாகியுள்ளது. மேலும், வில் ஜாக் மற்றும் வில் ஸ்மீட் ஆகியோருக்குப் பிறகு ஆடவர் தி ஹண்டரில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஹாரி புரூக்கின் இந்த அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு, இப்போது இங்கிலாந்து அணியின் தேர்வாளர்கள் தங்கள் தேர்வைப் பற்றி மீண்டும் சிந்திக்க நிச்சயமாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2023 ஐபிஎல் 16வது சீசனிலும் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி புரூக் சிறப்பான சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 






2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி


ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.