கடைசி டெஸ்ட் போட்டி:


 


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.. சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.


 


இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


15 ஆண்டுகளில் முதல் முறை:


பின்னர் களம் இறங்கிய இந்திய அணி கடந்த 15 வருடங்களுக்கு பிறகு ஒரு சாதனை செய்துள்ளது. அதாவது கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கிய 5 வீரர்கள் 50-க்கும் அதிகமான ரன்களை விளாசியிருக்கின்றனர். அந்தவகையில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதம் விளாசினார்கள். இதில் ரோகித் சர்மா 126 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 103 ரன்களை குவித்தார். அதேபோல் சுப்மன் கில் 150 பந்துகளில் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என மொத்தம் 110 ரன்களை குவித்தார். தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய தேவ்தட் படிக்கல் 103 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 65 ரன்களை விளாசினார்.





மற்றொரு புறம் சர்பராஸ்கான் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 56 ரன்களை குவித்தார். இவ்வாறாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கிய 5 வீரர்கள் 50 க்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.