மூத்த வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இந்திய டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், இந்திய அணியில் இனி வரும் காலங்களில் ஏராளமான இளம் வீரர்களை காண முடியும். ஐ.பி.எல். தொடர் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு திறமையான இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.


தொடக்க வீரர்கள்:


இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக பலரும் போட்டியிட்டு வரும் சூழலில், தொடக்க வீரராக களமிறங்குவதிலே பெரிய போட்டி நிலவி வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களிலே பலரும் தொடக்க வீரர்களாகவே உள்ளனர்.


இந்திய அணியில் தற்போது சுப்மன்கில், இஷன் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன்கில் உள்ளனர். இவர்கள் தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிரடியான வீரர்களாக உள்ளனர். இந்த சூழலில், நடப்பு ஜிம்பாப்வே தொடரில் சுப்மன்கில் – ஜெய்ஸ்வால், சுப்மன்கில் – அபிஷேக் சர்மா என தொடக்க வீர்ரகளாக களமிறங்கி வருகின்றனர்.


மல்லுகட்டும் இளம் வீரர்கள்:


இலங்கைக்கு எதிரான  டி20 தொடரில் தொடக்க வீரர்களாக களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், இஷன்கிஷன் ஆகியோரும் தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்கள் என்பதால் மேற்கண்டவர்களில் யாரைத் தொடக்க வீரர்களாக களமிறக்குவது? என்ற கேள்வி கம்பீர் முன் நிற்கிறது. டி20 மட்டுமின்றி ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலும் தொடக்க வீரருக்கான போட்டியில் இருப்பதால் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் இன்னும் சவால் அதிகளவில் உள்ளது,


இளமையும், அனுபவமும் மிகுந்த இந்திய அணியை கட்டமைக்க உள்ள நிலையில், தொடக்க வீரர்கள், ஒன் டவுன் வீரர், மிடில் ஆர்டரை தேர்வு செய்வதே தற்போது அணி நிர்வாகத்திற்கு முன் உள்ள பெரும் சவால் ஆகும். தொடக்க வீரராக களமிறங்க பலரும் மல்லுக்கட்டுவதால் தொடக்க வீரர்களாக ஆட முடியாத வீரர்களை ஒன் டவுன், மிடில் ஆர்டருக்கு ஏற்றவாறும் மாற்ற வேண்டியதும் அணி நிர்வாகத்திற்கு முன் உள்ள சவால் ஆகும்.


மேலும் படிக்க: ZIM vs IND T20I: இந்தியா - ஜிம்பாப்வே இடையே இன்று 5வது டி20 போட்டி - ஹராரே மைதானத்தில் கடைசி வெற்றி யாருக்கு?


மேலும் படிக்க:India vs Sri Lanka: இந்தியா - இலங்கை தொடர்.. மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!