டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்கோர் விளாசிய டாப் 5 வீரர்கள், டாப் 5 விக்கெட் டேக்கர்ஸ், அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.


அதிக ஸ்கோர் பதிவு செய்த டாப் 5 வீரர்கள்
உலகக் கோப்பைத் தொடரில் அதிக ஸ்கோர்களைப் பதிவு செய்த டாப் 5 வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, முதலிடத்தில் உள்ளார். அவர் 296 ரன்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


6 ஆட்டங்களில் விளையாடி அவர் இந்தச் சாதனையை செய்திருக்கிறார். பேட்டிங் ஆவரேஜ் 98.66.
நெதர்லாந்து வீரர் மேக்ஸ் ஓ தவுத் 8 ஆட்டங்களில் விளையாடி 242 ரன்கள் விளாசினார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். அவர் மொத்தம் 6 ஆட்டங்களில் விளையாடி 239 ரன்களை குவித்துள்ளார்.


இங்கிலாந்து கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் 6 ஆட்டங்களில் விளையாடி 225 ரன்களை குவித்தார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இலங்கை வீரர் குசல் மென்டிஸ் 8 ஆட்டங்களில் விளையாடி 223 ரன்கள் விளாசினார்.


டாப் 5 விக்கெட் டேக்கர்ஸ்
உலகக் கோப்பை தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வனின்டு ஹசரங்கா 7 ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் 7 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளனர்.


ஹசரங்கா 3 ஓவர்கள் வீசி 8 ரன்கள் விட்டுக் கொடுத்து பெஸ்ட் பவுலிங் எக்கானமி ரேட்டை வைத்துள்ளார்.
நெதர்லாந்து பந்துவீச்சாளர் பாஸ் டி லீடே 7 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளையும், ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸாராபானி 7 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்கா வீரர் ஆன்ரிச் நார்ஜே 5 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை சுருட்டினார்.


அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் லிஸ்ட்
ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ராஸா 8 ஆட்டங்களில் விளையாடி 219 ரன்கள் விளாசினார். மொத்தம் 11 சிக்ஸர்களை அவர் பதிவு செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் 10 சிக்ஸர்களுடன் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளார். அவர் மொத்தம் 212 ரன்களை எடுத்தார். இலங்கை வீரர் குசல் மென்டிஸ் 10 சிக்ஸர்கள், ஆன்ட்ரூ பால்பிர்னி (அயர்லாந்து) 9 சிக்ஸர்கள், மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா) 9 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ், ரிலீ ரோசோவ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் தலா 9 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளனர்.


உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நேற்று முடிந்தது. பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.


IPL 2023 Retention LIVE: கொல்கத்தாவிற்கு டிரேடிங் செய்யப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்


இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல நேற்று பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வெற்றி பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த அணி வெல்லும் இது 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.