இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அடுத்தாண்டு நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் படேல்( துணை கேப்டன்). ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ( விக்கெட் கீப்பர்)
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜிதேஷ்சர்மா, முகமது சிராஜ், ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான இதே அணிதான் ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடுகிறது.
சுப்மன்கில்லுக்கு நோ:
மோசமான ஃபார்ம், காயம் போன்ற காரணங்களால் அவதிப்பட்டு வரும் சுப்மன்கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணிக்கு கேப்டன்சி செய்த அனுபவம் கொண்ட கே.எல்.ராகுலுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல, மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடும் ரிஷப்பண்டிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம்பிடித்துள்ளார். இந்த அணியில் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தற்போது அறிவிக்கப்பட்ட அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், பும்ரா அனுபவம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். ஐபிஎல் ஆடிய அனுபவம் மற்ற வீரர்களுக்கு இருந்தாலும் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் மேலே குறிப்பிட்ட வீரர்களுக்குத்தான் அதிகளவு உள்ளது.
20 அணிகள்:
பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதி நடக்கிறது. இந்த டி20 உலகக்கோப்பையில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் பங்கேற்கின்றனர். குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் ஆடுகின்றனர்.
குரூப் சி-யில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி, குரூப் டி-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றனர்.