டி-20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய விராட்கோலி 82 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலியை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சக அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் கோலி தவித்து கொண்டிருந்தார். அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். அவை அனைத்திற்கும் கோலி தனது ஆட்டத்தினால் பதில் அளித்துள்ளார்.


சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து:


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், " இன்றைய ஆட்டம் உங்களுடைய கிரிக்கெட் வாழ்வில் நிச்சயம் சிறப்பான இன்னிங்ஸ். நீங்கள் களத்தில் விளையாடுவதை காணுவதில் அவ்வளவு மிகிழ்ச்சியாக இருந்தது. 19-வது ஓவரில் நீ விளாசிய சிக்ஸர் அருமை!” என்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.









சுரேஷ் ரெய்னா:


” கோலியின் சிறப்பான ஆட்டம் இது. களத்தில் அவருடைய ஸ்டைலில் விளையாடியதும் அரை சதம் அடித்ததும் அபாரம். அற்புதமான இன்னிங்ஸ்!” என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.


 









வீரேந்திர சேவாக்:


" தீபாவளி நல்வாழ்த்துகள்; என்னவொரு சிறப்பான ஆட்டம் இது;  நான் பார்த்திலேயே மிகச் சிறந்த டி-0 போட்டி இது. விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்,” என்று விரேந்திர சேவாக் டிவீட் செய்துள்ளார்.


 






ஹர்திக் பாண்டியா:






அமித் மிஸ்ரா:


 










வி.வி.எஸ். லஷ்மண்:






 


ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கும் விராட் கோலிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வெற்றி பெற்றதும் விராட் கோலியை கட்டியணைத்து தோளில் தூக்கி சுற்றி கொண்டாடிய ரோஹித் ஷர்மாவின் வீடியோவும் வைரலாகி வருகிறது.