உலககோப்பை டி-20 தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 82 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இன்றைய ஆட்டத்தில் மிகச்சிறப்பாக விளையாடிய விராட் கோலிக்கு அவரது காதல் மனைவி அனுஷ்கா சர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், விராட் கோலியை பாராட்டும் விதத்திலும் அனுஷ்கா சர்மா போட்டோக்களுடன் வாழ்த்து செய்தி எழுதி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.






அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:


"அன்பே, ஆரூயிர் அழகே! இன்றைக்கு ஏராளமான மக்கள் உன்னால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள வேளையில், அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டாய்! நீ அற்புதமான மனிதன். என் அன்பே, களத்தில் உன் முனைப்பும், திறமையை உறுதியாக வெளிப்படுத்தும் குணமும் அபாரமானது. இன்றைய போட்டி என் வாழ்வின் மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று என்பேன். இன்றைய நாளை நான் துள்ளி குதித்து ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் மகள் வளரவில்லை. ஆனால், ஒருநாள் தன் அப்பா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது செல்லமகளுக்குப் புரியும்.  என் அப்பா மிகவும் கடிமான காலத்தை கடந்து, உறுதியுடன் மீண்டு வந்தார் என்பதை அன்பு மகள் புரிந்து கொள்வார். உன்னை நினைத்து நான் பெருமையடைகிறேன். உங்களுடைய உறுதியான உழைப்புக்கு முடிவில்லை. உன் திறமைகளுக்கு எல்லையில்லை. என் காதலே! லவ் யூ ஃபாரெவர்.