டி20 உலகக் கோப்பை 2024:

ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள் (ஜூன் 2) ஆம் தேதி தொடங்கியது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, ஓமன், உகாண்டா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட  20 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. மொத்தம் 28 நாட்கள் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. 

முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் தான் 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பையின் பரிசுத்தொகையை ஐசிசி இன்று (ஜூன் 3) அறிவித்துள்ளது. அதாவது டி20 உலகக் கோப்பையில் இதுவரை இல்லாத அளவிற்கு பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறது ஐசிசி.  அதன்படி உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 20 கோடி 36 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இறுதிப் போட்டி வரை வந்து ரன்னர் அப் ஆகும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அரை இறுதி வரை வந்து தோல்வி அடைந்த இரண்டு அணிகளுக்கு தலா ஆறு கோடியே 54 லட்ச ரூபாயும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெரும் ஒவ்வொரு அணிக்கும் தலா மூன்று கோடியே 17 லட்சத்து  94 ரூபாய் பரிசு தொகை வழங்குகிறது ஐசிசி.

ஒன்பதாவது இடத்திலிருந்து 12வது இடம் வரை பிடிக்கும் அணிக்கு தலா 2 கோடியே 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 13 வது இடம் முதல் 20 இடம் வரை பிடிக்கும் அணிக்கும் ஐசிசி பரிசுத்தொகையை வழங்குகிறது. அதன்படி அந்த அணிகளுக்கு 1 கோடி ரூபார் 87 லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது ஐசிசி. 

பரிசுத்தொகை பட்டியல்:

சுற்று 

 பரிசுத் தொகை

வெற்றியாளர் ரூ 20.36 கோடி (US$2.45 மில்லியன்) 
இரண்டாம் இடம் ரூ.10.64 கோடி (1.28 மில்லியன் அமெரிக்க டாலர்)
அரையிறுதியில் தோல்வியடைந்த அணி  ரூ.6.54 கோடி (US$787,500)    
சூப்பர்-8 சுற்றில் வெளியேறியும் அணி ரூ 3.17 கோடி (US$382,500)
9 முதல் 12வது இடத்தை பிடிக்கும் அணிகள் ரூ 2.05 கோடி (US$247,500)
13 முதல் 20 வது இடத்தை பிடிக்கும் அணிகள்  ரூ 1.87 கோடி (US$225,000)

 

மேலும் படிக்க: T20 World Cup 2024: அடி தூள்! அமெரிக்காவுக்கு அமுல்.. அயர்லாந்துக்கு நந்தினி - என்ன விஷயம்?

 

மேலும் படிக்க: Kylian Mbappe: ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையும் கிலியன் எம்பாப்பே! அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?