பாகிஸ்தான அணிக்கு எதிரான 2026 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டிட்யில் நெதர்லாந்து அணி 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது
டி20 உலகக் கோப்பை
2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கொழும்புவில் நடக்கும் இந்த போடியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.மைக்கேல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷாஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் பந்தை பவுண்டரியுடன் தொங்கியது நெதர்லாந்து அணி.
நிதான ஆட்டம்:
மைக்கேல் லெவிட் அதிரடியாக தொடங்கினாலும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை, சல்மான் மிர்சா வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ் ஓ'டவுட் ஆட்டமிழந்தார்,பவர்பிளே முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது.
போராடிய ஸ்காட் எட்வார்ட்ஸ்:
இதன் பின்னர் பாஸ் டி லீட் மற்றும் அக்கர்மேன் சரிவிலிருந்து மீட்க போராடினர், அப்ரார் அகமது பந்து வீச்சில் அக்கர்மேன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஸ்காட் எட்வர்ட்ஸ் உடன் பாஸ் டி லீட் பார்ட்னர்ஷிப் அமைக்க போராடினர். 13 வது ஓவரில் அணியின் ஸ்கோரானது 100 ரன்களை கடந்தது, லீட் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர்
கடைசி நேரத்தில் சொதப்பல்:
ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணியின் ஸ்கோரானது 170 ரன்களை தாண்டும் என எதிர்ப்பார்த்த நிலையில் கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களுள் இழந்தது நெதர்லாந்து அணி. இதனால் நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களும், பாஸ் டி லீட் 30 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை சல்மான் மிர்சா 3 விக்கெட்டும், அப்ரிடி, அப்ரார், முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
