இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் கே.எல்.ராகுலை கழட்டிவிட்டிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டி20 உலக்க கோப்பை:


.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் இறுதிப் போட்டி வரும் மே 27 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்க உள்ளது. இச்சூழலில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் தங்களது டி20 வீரர்களை அறிவித்தது. அதேநேரம் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பிடிப்பார்களை யாரை எல்லாம் பிசிசிஐ கழட்டி விட போகிறது என்ற குழப்பத்தில் இருந்தனர் ரசிகர்கள்.


இந்நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை அறிவித்தது பிசிசிஐ. இதில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யஜஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் ஷிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் கே.எல்.ராகுலை பிசிசிஐ கழட்டி விட்டுள்ளது. இது ரசிகர்களிடம் கே.எல்.ராகுலை கழட்டி விடுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


கே.எல் ராகுல் ஏன் எடுக்கப்படவில்லை?


அதாவது இந்த ஐ.பி.எல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் சிறப்பாகவே தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை அவர் விளையாடிய 9 இன்னிங்ஸில் 144 ரன்ற ஸ்டிரைக் ரேட்டுடன் லக்னோ அணிக்காக 378 ரன்களை குவித்துள்ளார். இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தும் கே.எல். ராகுலை அணியில் எடுக்காதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கே.எல்.ராகுலுக்கு பதிலாகத்தான் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருக்கின்றனர். ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சனை விட கம்மியான ஸ்டிரைக் ரேட்டுடன் இருப்பதும் இவரை அணியில் எடுக்காதற்கான காரணமாக இருக்கலாம். அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 54 இன்னிங்ஸ்களிலும், 3வது இடத்தில் 10 இன்னிங்ஸ்களிலும், 4வது இடத்தில் வெறும் நான்கு இடத்தில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ராகுல் மிடில் ஆர்டரில் அதிகம் விளையாடியதில்லை என்பதால் அந்த இடத்திற்கான தேர்வாக ஷிவம் துபே இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்திய டி20 அணி வீரர்கள்:


ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ்.