டி20 உலகக் கோப்பை 2024ல் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை வீச்த்தி ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதே சமயம், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அனி அரையிறுதியில் விளையாடும் கனவு முற்றிலும் கலைந்தது. 


இதன்மூலம, டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் அணியும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்திய அணியும் எதிர்கொள்கிறது. 


அரையிறுதி போட்டிகள்: 


தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி ஜூன் 27ம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தருபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.






இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜூன் 27ம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இரண்டு அரையிறுதியிலும் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 29ம் தேதி இறுதிப் போட்டியில் சந்திக்கும். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.






மழை பெய்தால் யாருக்கு சாதகம்..? 


டி20 உலகக் கோப்பையில் இதுவரை தோற்கடிக்கப்படாத ரோமஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 6 புள்ளிகளுடன் குரூப் 1ல் முதலிடத்தை பிடித்தது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 


குரூப் 2ல் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 4  புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 


அரையிறுதி ஆட்டத்தில் முக்கியமான அம்சம் என்னவென்றால், முதல் அரையிறுதிக்கு ஒரு ரிசர்வ் நாள் உள்ளது. ஆனால், இரண்டாவது அரையிறுதி ரிசர்வ் நாள் இல்லை. 


 அரையிறுதி போட்டியில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா முதல் அரையிறுதியில் இருந்தும், இந்தியா இரண்டாவது அரையிறுதியில் இருந்தும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். 


 மோசமான வானிலை காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால், இரண்டு இறுதிப் போட்டியாளர்களும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.


அரையிறுதி அட்டவணை:


முதல் அரையிறுதி: தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான், புதன்கிழமை ஜூன் 26 (உள்ளூர் இரவு 8:30), பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தருபா, டிரினிடாட் மற்றும் டொபாகோ


இரண்டாவது அரையிறுதி: இந்தியா v இங்கிலாந்து, வியாழன் ஜூன் 27 (உள்ளூர் காலை 10:30), கயானா தேசிய மைதானம், கயானா